அயர்வு யிர்த்தனன் எழுந்தனன் அஞ்சலி அளித்தனன் குனிசார்ங்கன், வயிர வப்பிரான் திருவடிப் பத்தியும் மற்றவன் தன்மாட்டுப், பயிலும் இன்னருட் கருணையும் வேண்டினான் பரிந்தவற் கவைநல்கிப், பெயர்பு மீண்டனன் பிச்சைதேர்ந் தருளிய பிறாண்டும்எய் தினன்மாதோ. 32 நாணேற்றற் குரிய சார்ங்கம் என்னும் வில்லுடைய திருமால் தளர்ச்சி நீங்கி எழுந்து அஞ்சலி முகிழ்த்து வயிரவப் பிரானார் திருவடியிற் பேரன்பும் அப்பயிரவர் தன்னிடத்துப் பொருந்தும் இனிய அறக்கருணையும், தந்தருள வேண்ட இரங்கி அத்திருமாலுக்கு அவற்றை வழங்கிப் பெயர்ந்து திரும்பினர். பிச்சை பெறற் பொருட்டுப் பிற இடங்களையும் அடைந்தனர். உலகம் எங்கணுந் திரிந்துநெய்த் தோர்ப்பலி ஏற்பவ னென ஒன்னார், வலம்மி சைந்தவேற் கடவுளர் தருக்கற வாங்கினன் முனிச்செல்வர், குலம டப்பிடி அந்நலா ரையுங்குறு நகையினின் மயல்பூட்டி, நிலவரைப்பினிற் காஞ்சியை அணுகினன் நெடுந்தகை நெறியானே. 33 உலகெங்கும் சுழன்றிரத்தப் பிச்சையை ஏற்பவர் போலப்பகைவர் வலியை விழுங்கிய வேலையுடைய தேவர்தம் இறுமாப்பினைக் கவர்ந்தனர்; முனிவரருடைய குடிப்பிறந்த மெல்லிய பெண் யானையை ஒக்கும் அம்மகளிரையும் புன்சிரிப்பினால் காம மயக்கம் ஊட்டி நில வுலகில் பெருந்தகை காஞ்சியை வழியே அணுகினர். கறைக்க பாலத்தை ஒருவயின் நிறுவினன் சேனைகா வலன்றன்னை, இறைத்த செம்புனற் சூலத்தின் நுதியினின் றிழிச்சுபு மால்வேண்ட, நிறைத்த பேரருட் கருணையால் உதவினன் நிகழ்ந்ததன் பெயரானே, மறைக்கு நாயகன் வயிரவேச்சரன்றனை நிறீஇயினன் வழிபட்டான். 34 இரத்தக் கபாலத்தை ஓரிடை வைத்து விடுவச் சேனனைப் பெருக் கெடுத்த செந்நீர் கொண்ட சூலத்தி னுனியினின்றும் இறக்கித் திருமால் குறையிரந்தமையால் பேரருளொடும் அவனை உதவி வேதநாயகனாகிய வயிரவேச் சரனைத் தாபித்து வழிபாடு செய்தனர். ஐய னேமறை முடிமிசை நடித்தருள் அமலனே எனை ஆண்ட, மெய்ய னேஎனப் பழிச்சிநெக் குருகினன் விளங்கிஇவ் விலிங்கத்தே, தைய லோடினி தமர்ந்தருள் யானும்நின் சந்நிதி எதிர்வைகி, உய்யு மாறருள் அடியனேன் செயத்தகும் உறுபணி அருள் என்றான். 35 |