| விடுவச்சேனேசப் படலம் கலிநிலைத் துறை	 		| போதணி பொங்கர் உடுத்ததண் கச்சிப் புரத்திடை மாதர்வண் கோயில் வயிரவே சத்தை வகுத்தனம்
 ஆதியும் அந்தமும் இல்லான் அமர்ந்தருள் அங்கதன்
 மேதகு தென்பால் விடுவச்சே னேச்சரம் விள்ளுவாம்.    1
 |       மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த காஞ்சிமா     நகரில் அழகிய வளமமைந்த வயிரவேசத் திருக்கோயிலை வகுத்துரைத்தனம்.
 தோற்றமும் அழிவுமில்லாத சிவபிரான் விரும்பி எழுந்தருளி அருள்
 செய்கின்ற அத்தலத்திற்குத் தெற்கில் மேன்மை பொருந்திய விடுவச்
 சேனேச்சரத்தை விளம்புவாம்.
 திருமால் சக்கரம்இழந் தயர்தல்	 		| வெந்தொழில் தக்கனார் வேள்வி விளிந்தநாள் மாயவன் சந்திர சேகரன் தாளினை ஏத்தி விடைகொண்டே
 அந்தண் விரசை கடந்துவை குந்தம் அடைந்தபின்
 சுந்தரப் பொன்தவி சேறி இருந்திது சூழ்ந்தனன்.      2
 |       கொடிய செயலையுடைய தக்கனது யாகம் முற்றுறா தழிந்த நாளில்      திருமால் சந்திர மௌலியர் திருத்தாட் டுணைகளைத் துதித்து விடைபெற்று
 அழகிய தண்ணிய விரசை யாற்றினைக் கடந்து வைகுந்தத்தை அடைந்த
 பின்னர் அழகிய பொன்னாலியன்ற ஆசனத்தில் ஏறியிருந்திதனை
 ஆராய்ந்தனர்.
 		| மலைவறு காட்சி விடுவச்சே னன்முதல் மந்திரித் தலைவர் தமக்கு நிகழ்ந்தது சாற்றிக் கவன்றனன்
 குலவும் அரக்கர் அவுணரைப் போரிற் கொலைசெய்திவ்
 வுலக முழுவதும் ஓம்புதல் என்தொழி லாகுமால்.     3
 |       தன்னொடு மாறுபடாத அறிவினையுடைய விடுவச் சேனன் முதலான     மந்திரித் தலைவர் தமக்கு நிகழ்ந்ததை விரித்துரைத்துக் கவலை யெய்தினர்.
 ‘தலைமை பூணும் அரக்கரையும், அசுரரையும் போர்க்களத்திற் கொன்று
 நல்லோரை இவ்வுலகங்கள் முற்றவும் காத்தல் எனக்குரிய தொழிலாகும்’.
      ஆல், தேற்றமும், இரக்கமும் குறித்து நின்றது.	 		| ஏயும் அலங்கரத் தின்றித் தொடங்கும் உழவன்போல் ஆயுதங் கைஇன்றி எவ்வா றகிலம் புரப்பல்யான்
 காய்கதிர் மண்டிலந் தோற்றுங் கடவுள்மா சக்கரம்
 மாய்வரும் யாக்கைத் ததீசியி னால்வாய் மடிந்ததே.    4
 |  |