|      பகைவரைக் கொல்லும் வலியுடைய தனது கொடுமையைப்    பெருமானார்க்குக் கூறிக் கொல்வித்து இடையூற்றினைச் செய்த தேவர்கள்
 இந்நாளில் அழிந்த திறங் கண்டு உவகை மிக்குத் தனது முடியை அசைத்து
 அவர்க்குக் கேடு தகும் தகும் எனல் போலக் கங்கையை அணிந்த சடா
 முடியில் கொக்கிற கசைந்தாடவும்,
 		| மறைமுதல் ஏவ லாற்றின் வயமகன் இயற்றுந் தண்டக் குறையினை நிரப்ப எண்ணிக் கொடுவிடம் இறைப்ப தேபோல்
 கறைஅணல் துத்திப் பாந்தட் கலன்கள்வாய் பூட்டு விட்டு
 முறைமுறைக் கவைநா நீட்டி மூசென உயிர்த்து நோக்க.   	           54
 |       சிவபிரானாரது திருக்குறிப்பினால் வீரபத்திரர் இயற்றிய தண்டத்தின்    குறைபாட்டினை நிறைவு படுத்த நினைந்து கொடிய விடத்தினை முகந்
 தூற்றுவது போல விடமுடைய கீழ்வாயையும், படப் பொறியையும் உடைய
 பாப்பணிகள் வாயைத்திறந் தடுத்தடுத்துப் பிளவுபட்ட நாவை நீட்டி
 மூசெனும் ஒலியுடன் மூச்செறிந்து நோக்கவும்,
 		| கணங்கெழு பாற்றுப் பந்தர்ப் பறந்தலைக் களத்து ஞாங்கர் உணங்குறும் இமையோர் ஆவி உள்ளதோ இலதோ என்னப்
 பிணங்களைத் தொட்டுப் பார்ப்பான் பிணைக்கரம் நீட்டிய யாங்கு
 வணங்குடல் மதியம் வெண்கேழ் வளங்கதிர் பரப்பா நிற்ப.    55
 |       கூடிய பருந்துகள் சிறகை விரித்துக் கொட்புறு பந்தரையுடைய    போர்க்களத்தின்கண் வாடுகின்ற இமையவர் தம் உயிர்கள் அவரவருடம்
 பிடை  உளவோ இலவோ என் றையுற்றுப் பிணங்களைத் தொட்டுப்
 பார்க்கும் பொருட்டு இருகரங்களை நீட்டினாற் போல வளைந்த வடிவுடைய
 பிறைமதி வெண்ணிறச் செழுங் கதிரைப் பரப்பா நிற்கவும்,
 		| இகழ்ந்தவர் தமக்கே பின்னும் இன்னருள் புரிய வேண்டிப் புகுந்திறம் நோக்கி உள்ளம் பொறதுவேர்த் தூடிப் பொங்கி
 அகந்தளர்ந் தெழுந்து வீழ்ந்து புரண்டுகை யெறிந்தா லென்ன
 நெகுஞ்சடைக் கங்கை மாது நிரந்தரந் ததும்பி ஆட.      56
 |       மதியாதவர் தமக்கே மேலும் இனிய அருளைப் புரிய விரும்பி     எழுந்தருளும் நிலைமையை நோக்கி மனம் தாங்காது வியர்த்துப் பிணங்கிச்
 சினந்து மன மெலிந்து வீழ்ந்தெழுந்து புரண்டு கையெறிந்தாலென்ன
 நெகுகின்ற சடையினி லுறைகின்ற கங்கை மாது தொடர்ந்து துளும்பி ஆடவும்,
      எழுதல் வீழ்தல் புரளுதல் (திரைக்)கை எறிதல் (வயிற்றிலெற்றுதல்)     கங்கைக்கும் மகளிர்க்கும் இயைந்த செயல்.
 		| தாதைஎன் றிருந்து தீங்கே தாங்கினாற் காக்கம் நல்கப் போதரேன் யானென் றூடும் பூவையைத் தழீஇக்கொண் டேகும்
 ஆதரங் கடுப்ப அன்ன அணங்கினை இடப்பாற் கையாற்
 காதலித் திறுகப் புல்லி அணைத்திடுங் காட்சி தோன்ற.     57
 |  |