| 		| பொதுவற நம்பி நம்மைப் போற்றும்ஆ யிடைக்கண் சென்று கதுமென இலிங்கந் தாபித் தருச்சிமின் கரிசு நீங்க
 விதியுளித் தக்கன் றானும் இம்முறை விழைக பூசை
 இதுபுரி காறும் நுங்கட் கிடும்பையே புரிவர் மாற்றார்.   	               73
 |       விரும்பி நம்மைத்துதிக்கும் அவ்விடத்திற் சென்று விரைய இலிங்கம்     நிறுவிக் குற்றம் நீங்க அருச்சனை புரிமின். தக்கனும் விதிப்படி இங்ஙனம்
 பூசனையை விரும்பிச் செய்வானாக. பூசனை புரியுமளவும் பகைவர்
 நுங்கட்குத் துன்பத்தையே செய்வர்.’
      பொது அறப்போற்றல் ‘‘பரிந்து நெஞ்சினும், அன்னியர் தமை ஒழித்     தரனை ஏத்துதல்’’ (திருநெறிக்.30) சிவாத். 3. கச்ச. 9. மணி க. 59).
 கலிநிலைத் துறை	 		| அனையர் தாரகன் சூரபன் மாமுத லாகும் இனைய தானவர் என்றறி மின்கள்என் றருளிக்
 கனைபொ லங்கழல் வீரனுங் கணங்களுஞ் சூழத்
 தனைநி கர்த்தவன் கயிலையைச் சார்ந்தனன் இப்பால்.   74
 |       ‘அப்பகைவர் சூரபன்மா, சிங்கமுகன் முதலானோர் ஆய அசுரர்     ஆவர் என்றறிமின்’ என்றருள் செய்து பொன்னால் இயன்ற ஒலிக்கின்ற
 கழலையணிந்த வீரபத்திரரும், கணங்களும் புடைசூழத் தனக்குவமை
 இல்லாதவர் கயிலையைச் சார்ந்தனர். இனி,
      ‘‘தன்னையே தனக் கொப்பவன்’’ (கந்த. மோன நீங்கு படலம் 29.)	 		| புள்ளி னத்தர சுயர்த்தவ னாதிப்புத் தேளிர் வள்ளல் ஆணையின் கிளவிபொச் சாத்தலின் மதுகை
 நள்ளு சூரபன் மாமுதல் தயித்தியர் நலிய
 விள்ள ருந்துயர்ப் பெருங்கடல் ஆழ்ந்தனர் மெலிந்து,     75
 |       கருடக் கொடியுடைய திருமால் முதலானோர் வள்ளல் ஆணையாகிய     திருவாக்கை மறத்தலின் வலிமை செறிந்த சூரபன்மா முதலாம் அசுரர்
 வருத்தச் சொல்லரிய துன்பப் பெருங்கடலில் மெலிந்து அழுந்தினர்.
 		| மெலிந்த பின்மறைக் கிழவனை உசாவுபு விடையோன் வலிந்த வாய்மொழி நினைந்துபோய்க் கச்சியை மருவி
 இலிங்கம் ஆயிடை நிறீஇத்தொழு திடும்பைதீர்ந் துய்ந்தார்
 பொலிந்த விண்ணவர் தம்மொடு தக்கனும் போகி.        76
 |       வருந்துங் காலைப் பிரமனை விசாரித்து விடைப்பெருமான் அருளிய     திருவாக்கை எண்ணிக் காஞ்சியை அடைந்து சிவலிங்கம் தாபித்துத் தொழுது
 விண்ணவர் துன்பம் தீர்ந்து நலம் பெற்றனர். அவர் தம்மொடும் தக்கனும்
 சென்று,
 |