மக்கள் பூசனை விளைத்தஅச் சூழலை மருவி நெக்க அன்பினால் தான்ஒரு சிவலிங்கம் நிறுவித் தக்க வாய்மையின் தொழுதனன் வெவ்வினை தணந்தான் மிக்க சீர்க்கண நாதனாம் வீறுபெற் றிருந்தான். 77 | அரியச்சுவர் பூசனை புரிந்த அவ்விருக்கையை அடைந்து நெகிழ்ந்த அன்பொடும் தான் ஓர் சிவலிங்கம் நிறுவித் தக்கேசப் பெருமான் என்னும் திருப்பெயர் விளங்கத் தகுந்த உண்மையன்பினால் வணங்கித் தீவினை நீங்கப் பெற்றான்; பெருஞ்சிறப்பினை யுடைய கணநாதனாகும் பெருமை பெற்று விளங்கினான். தக்கேசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 1270 முப்புராரி கோட்டப் படலம் கலிநிலைத் துறை சிறுவ தீர்த்தநீ அஞ்சல்என் றியமனைச் சீறி மறுவ தீர்த்தவன் மேயதக் கேச்சரம் வகுத்தாம் சறுவ தீர்த்தமேல் பாங்கரில் தாழ்ந்தவர்க் கவமாய் உறுவ தீர்த்தருள் முப்புரா ரீச்சரம் உரைப்பாம். 1 | மார்க்கண்டேயர் வழிபாடு செய்ய அவரை நோக்கிச் ‘சிறுவனே! தூயோனே! நீ அஞ்சாதே’ என்று இயமனைச் சினந்து அவ்வியமன் மேற்கொண்ட சொல்லும் செயலுமாகிய குற்றங்களைத் தீர்த்த பெருமான் விரும்பிய தக்கேச்ச ரத்தினைப் பற்றி வகுத்துரைத்தோம். சருவ தீர்த்தத்திற்கு மேற்றிசையில் வணங்கினவர்க்குத் தீயனவாய் வந்துறுவன வற்றை நீக்கி அருள் செய் முப்புரத்தவர் வழிபட்ட முப்புராரீச்சரத்தைக் கூறுவோம். எழுசீரடி யாசிரிய விருத்தம் முப்பு ரங்களின் மூவர் புத்தன் மொழித்தி றத்து மயங்கிடா தப்ப ணிந்தவர் தாள்ப ணிந்தரு ளாற்றின் நின்றனர் ஆதலால் பொய்ப்பு ரந்தபு காலை நீற்றறை நாவின் மன்னவர் போல்எரி தப்பி வாழ்ந்தனர் ஈசன் ஆணையில் நிற்ப வர்க்கிடர் சாருமோ. 2 | மூன்று புரங்களினும் மூவர் திருமாலின் கூறாகிய புத்தரது சொல் வலையில் மயங்கி விழாது கங்கையை அணிந்தவர் திருவடிகளைப்பணிந்து அருள் நெறியில் நின்றனர். ஆதலால் பொய்ந் நெறியில் நின்றவர்க் கிருக்கையாகிய முப்புரங்களை அழித்த காலத்தில், திருநாவுக்கரசு நாயனார் |