| 		| வெற்பெ லாமண்ணின் வீழ்த்து வலாரிதன் ஒப்பி லூர்தியை ஏவிஒ றுத்தல்போற்
 பற்பல் போர்கள் சரித்துப் பகட்டினம்
 முற்பி ணைத்து நடத்துவர் மொய்ம்பினோர்.    105
 |       மலைகளை எல்லாம் மண்ணில் விழச்செய்து இந்திரன் தனது     ஊர்தியாகிய மேகங்களைச் செலுத்தி அவற்றை மிதித்துத் தண்டித்தல்போல
 வலிமையையுடைய மருதநிலத்து மக்கள் இட்ட பல நெற்போர்களைச் சரித்து
 எருமைக்கடாக்களை ஒன்றொடொன்று பிணைத்து மிதிப்பிப்பாராயினர்.
 		| நெற்ப லாலத்தின் நீங்கிய தோவெனப் பற்பல் கால்முகங் கோட்டின பார்ப்பபோற்
 பொற்ப வாயினில் பூங்கதிர் கவ்வுபு
 சொற்ப கட்டினஞ் சுற்றி உழக்குமால்.         106
 |       நெல், வை(வைக்கோல்) யினின்றும் நீங்கியவோ என்று பன்முறையும்    முகத்தை வளைத்துப் பார்ப்ப போலப் பொலிவு பெற வாயா லழகிய
 நெற்கதிர்களைக் கவ்விக்கொண்டு நெற்போர்களை எருமைக் கடாக்களின்
 கூட்டம் சுற்றிக் கலக்கா நிற்கும்.
      சொல்-நெல். பலாலம்-வை.	 		| உடலின் ஆவி பிரிந்தென ஊழ்வினைத் தொடர்பு நீங்குவ தொப்பத் தொகுத்தநெற்
 படலை வையினில் நீங்கப் பகட்டினம்
 அடைய வுந்தொடர் நீங்கி அகலுமால்.        107
 |       உடலினின்றும் ஆவி பிரிந்தமையால் பிராரத்த கன்ம சம்பந்தமும்     அந்த அளவில் நீங்குதல் போலத், தொகுத்த நெற்போர்த் தொகுதியில்,
 நெற்குவியல் வைக்கோலின் நீங்கக் கடாவினம் முழுதும் பிணிப்பினின்றும்
 நீங்கி அகலும்.
 		| வைய கற்றி வளிஎதிர் தூற்றலும் பொய்ய கன்றவர் ஐம்பொறி போதல்போற்
 கைய கன்று கழிவைப் பொடியொடும்
 ஒய்யெ னப்பதர் அப்புறத் தோடுமால்.       108
 |       வைக்கோலினின்றும் நெல்லை யகற்றிக் காற்றெதிர் தூற்றலும்,    சிவஞானிகளுடைய ஐம்பொறிகளின் தொழில் ஒழிதல் போல, நீங்கிக் கழிந்த
 வைக்கோற் பொடியோடும் நெற்பதர்கள் விரைந்து அப்புறத்தோடா நிற்கும்.
      பொய் அகன்றவர்-உள்ளனபோலத் தோன்றி உண்மையில் நிலையாமை     உடைய உலகப் பொருள்களின் மேற் பற்று நீங்கிய சிவஞானிகள்
 |