வாகிய சரியை கிரியைகள் உபாயச் சரியை கிரியைகளாம். உபாயம் வழி வழிச் சாதனமாய் முத்திபயக்கும். உண்மை நேர் சாதனமாம் என்க. சார்பு பற்றாமற் செய்யப்படும் சரியை கிரியைகள் உண்மைச் சரியை கிரியைகளாம். இவற்றின் விரிவெல்லாம் ஆசிரியர் திராவிட மாபாடியத்துள் விரித்து விளக்கி யிருத்தல் காண்க. செய்த செய்வன வாய தீவினை யாவும் இச்சிவ பத்தர்பால் எய்தி டாகம லத்தி லைக்கம லத்தின் என்றறி மின்களோ ஐது காமம் விழைந்த பத்தியும் நல்ல றத்துறை யார்பெறின் நைத ராதிது பத்தி பேதம் உணர்ந்து ளோர்நவில் கிற்பதே. 9 | செய்தனவும், செய்வனவுமாகிய சஞ்சிதமும் ஆகாமியமும் உண்மைப் பத்தியுடையவரைத் தாக்கா ஆகும். தாமரை யிலையில் உள்ள நீரைப் போலப் பற்றற்ற நிலை என்றறிமின். காமியப்பயன்களை விரும்பிய பத்திதானும் நல்ல சிவபுண்ணியக் கூறுபாடுகளை உணர்ந்தோர் பெறுவராயின் அழகிதாய்க் கெடாது. இது பத்தியின் திறங்களை உணர்ந்தோர் அடிப்படக் கூறுவது. திரிபு ரத்தவர் சார்பு பற்றிய பத்தி யோர்நனி தீமையே புரிம னத்தின ராத லால்வரு புத்த நாரத ரான்மயல் மருவி இற்றனர் இன்ன மூவரும் வள்ளல் சத்தி பதிந்தெழும் பெரிய பத்திய ராத லால்அவர் பேசு மையல் கடந்தனர். 10 | முப்புரத்தசுரர் சார்பு பற்றிய பத்தியோராகலானும் பெரிதும் தீமையையே விரும்புகின்ற மனத்தினராகலானும் புத்தரும் நாரதரும் ஆகும் இவ்விருவரால் மயக்கத்தை எய்தி முடிவுற்றனர். சுபுத்தி, சுதன்மா, சுசீலன் எனப்பெறும் இம்மூவரும் இறைவனின் திருவருட் சத்திபதிந்தெழும் பெரிய பத்தியினராகலின் அவ்விருவர் கூறிய மயக்கவுரையை வென்றனர். கலி விருத்தம் பேறு மெய்தினார் என்று பேதுறா வாறு மேதகு சூதன் மாதவர் கூறு கூற்றினுக் கிறைகொ டுத்தனன் வேறு மாக்கத்தை மேல்வி ளம்புவான். 11 | முத்தியையும் தலைப்பட்டனர் என்று மயங்காதபடி மேன்மை பொருந்திய சூதமுனிவர் மாதவர்கள் வினாவிற்கு விடை கொடுத்தனர். வேறோர் பெருங்கதையை இனிக் கூறுவார். முப்புராரி கோட்டப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம். 1281 |