|      ‘இது பாம்பன்று அல்குல்; யானையல்ல இவை கொங்கைகள்; பச்சை    ஓணான் அன்றிது மூக்கு; சிங்கம் அன்றிது நடு; களிப்பிக்கும் இவற்றைக்
 கொலை புரிவன என அஞ்சிப் புறம்போதலை எண்ணாதீர் எம்மைத்
 தழுவுமின்’ என்று கூறி அடியிணையைத் தொழுவார் ஆவர்.
 		| இவ்வாறு தம்பிரான் திருமேனி எழில்நோக்கிச் செவ்வாய்மைக் கற்பிழந்தார் திறங்கண்டு வெகுண்டெழுந்த
 அவ்வாழ்க்கை முனிவர்இடு சாபங்கள் அடிகள்பால்
 துவ்வாமை உறநோக்கிக் கொடுவேள்வி தொடங்குதலும்.    19
 |       இங்ஙனம் உயிர்களின் தலைவர் தம் திருமேனி அழகினை நோக்கித்     திரிபில்லாமை வாய்த்த கற்பினை இழந்தார் நிலைமையைக் கண்டு பொறாது
 சினங்கொண்டெழுந்த முனிவரர் விடுத்த சாபங்கள் பெருமானிடத்து
 அநுபவப் பொருளாகாமையை எண்ணிக் கொடிய ஆபிசார யாகத்தைத்
 தொடங்கி இயற்றுதலும்,
 		| எழுந்தமுய லகன்புலிபாம் புழைபூதம் எரிமழுவும் தொழுந்தகையார் கைக்கொண்டு தொடங்குதிரு நடங்காணூஉ
 விழுந்தயர்ந்து சோர்ந்துள்ளம் வெரீஇயினார் தமக்குமதிக்
 கொழுந்தணிவார் அறிவளிப்பக் குறைதீரத் தொழுதெழுந்தார்.
 |       வேள்வியினின்றும் எழுந்த முயலகன், புலி, பாம்பு, மான், பூதம்,    நெருப்பு, மழு இவற்றைப் பெருமானை அழிக்கத் தூண்டப் பிரானார்
 அவற்றைக் கொண்டு அவ்விடத்துத் திருக்கூத்தியற்றக்கண்ட முனிவரர்
 முனைப்பிழந்து உடல் தளர்ந்து, உள்ளமும் தளர்ந்து அஞ்சினார். பிறையை
 வாழ்வித்த பெருமானார் அம்முனிவரர்க்கு அறிவை நல்கப் புரிந்த குற்றங்கள்
 நீங்க வீழ்ந்து வணங்கி எழுந்து நின்றனர்.
 		| சென்னிமிசைக் கரங்கூப்பித் தெய்வசிகா மணிபோற்றி இன்னருளால் எமைப்புரக்க எழுந்தருளுஞ் செயல்போற்றி
 பொன்னிதழித் தொடையாய்எம் பிழைஅனைத்தும் பொறுத்தருளிப்
 பன்னரிய முத்திநிலைப் பரபோகம் அருள்என்றார்.        21
 |       சிரமிசைக் கரங்களை குவித்துத் ‘தெய்வசிகாமணியே எம்மைக்    காத்தருள்க! அறக்கருணையால் எம்மைக் காக்க எதிரெழுந்தருளிய
 நிகழ்ச்சிக்கு வணக்கம். பொன்போலும் கொன்றை மலர் மாலையை
 அணிந்தோய்! யாம் செய்குற்றங்கள் அனைத்தையும் பொறுத்தருளிப்
 பேசற்கரிய அனுபவப் பொருளாகிய அடிசேர் முத்தியாகிய பரபோகத்தினை
 அருளுக’ என்றனர்.
      எல்லாத் தெய்வங்களும் முடிமணியாக வைத்துப் போற்றற்     குரியராதலின் தெய்வசிகாமணி போற்றி எனவும், தொழுது பிழைதீரற்
 கிடனாவார் என்பார் தொழுந்தகையார் எனவும் கூறினர்.
 |