412காஞ்சிப் புராணம்


முழங்கக்குடமுழா வாசிக்க அச்சந்தருங் கண்களும், இளமையும், வெண்மையும்
உடைய விடையுடைப் பெருமான் கருணை மீக் கூர்ந்து,

     ‘சூர்த்தகண்’ (சிவபுண்ணியப் படலம் 12.) காண்க,

எவ்வரம் விழைந்தனை யெனினும் நல்குதும்
அவ்வரம் புகல்என அசுரன் கூறுவான்
செவ்வன்நின் திருவடிச் சேவை நித்தலுஞ்
செய்வது விழைந்துளேன் கருணை செய்துநீ.       9

     ‘எவ்வரமெனினும் வழங்குவேம்’ கேளென அருள அசுரன் கூறுவான்,
‘திருவடி தரிசனம் நாடொறும் முட்டின்றிப் பெற விரும்பியுள்ளேன்’ ஆகலின்
கருணை வைத்து நீ,

பீட்டுயர் முருகவேள் வரைப்பி ராட்டிஓர்
கோட்டிளங் களிற்றொடு கோட்க ணங்களின்
ஈட்டமொ டெய்திஎன் இருக்கை வாய்தலின்
மாட்டிருந் தெனக்கருள் எனவ ணங்கினான்.      10

     ‘பெருமையொடும் உயர்ந்த முருகவேளும், இமய வல்லியும்,
ஒற்றைக்கொம்புடைய விநாயகப் பெருமானும், சிவகணங்களும் உடன் சூழ
எனதுமனை வாய்தலின் முன் எழுந்தருளியிருந்தருள் செய்க’ என
வணங்கினான்.

எண்ணிய எண்ணியாங் களிக்கும் எந்தைஅவ்
வண்ணமே ஆயிடை மருவி வைகினான்
கண்ணுறும் அசுரனுங் காலந் தோறும்அங்
கண்ணலை அடிதொழு தன்பின் வைகுநாள்.       11

     எண்ணியவற்றை எண்ணியவாறே அருளும் எமது தந்தையார்
அங்ஙனமே அவன் இருக்கையில் நிலை பெறத் தங்கினார். கருத்துமிகும்
அசுரனும் காலங்கள்தோறும் அண்ணலைத் தொழு தன்பொடும் வைகுநாளில்,

     தம்மையும் தருதல்: ‘‘அறம் பூண்டு, பாரியும் பரிசில ரிரப்பின்,
வாரேனென்னா னவர்வரை யன்னே’’ எனவும், ‘‘யாமும் பாரியும் உளமே,
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே’’ எனவும் (புறநா. 108; 110.)

வாசவன் நெடியவன் மற்றை யாரையும்
பூசலிற் புறங்கொடுத் திரியப் போக்கினான்
காசணி மிடறுடைக் கடவுள் முன்னுறீஇ
ஏசறு செருக்கினால் இதுவி ளம்புவான்.           12

     இந்திரனையும், திருமாலையும், மற்றையோரையும் போரிற் புறங்காட்டி
ஓடும்படி போக்குவித்தான். நீலமணிபோலும் அழகிய கண்டமுடைய
சிவபெருமுான் முன்சென்று துன்பத்திற்கேது வாகிய செருக்கினால் இதனைக்
கூறுவான்.