வாணேசப் படலம் 415


நின்னமர்க் குடைந்தபின் நினைஅ டக்குவான்
துன்னுசீர் உபமனி யனுக்குத் தொண்டுபூண்
டென்னருட் குரியனாய் எறுழ்ப படைத்தனன்
அன்னவன் முன்னவ னாக எண்ணலை.           21

     ‘தோற்ற பின்னர் நின்செருக்கினை அடக்குதற் பொருட்டுச் செறிந்த
சிறப்புடைய உபமன்னிய முனிவர்பால் திருவடித் தீக்கையுற்று வழிபாட்டினால்
எமதருளுக்குப் பாத்திரனாய் வன்மை எய்தினன். முன்னை நிலையில்
வைத்தவனை எண்ணாதே.’

என்னநாள் அவன்வரும் என்றி யேல்ஒரு
நின்மகட் கோர்பழி நிகழ நின்நகர்
நன்னெடுங் கொடியுள்ஒன் றொடியும் நாள்வரும்
என்னலும் அசுரர்கோன் இருக்கை எய்தினான்.    22

     ‘அவன் வருநாள் என்றென வினவுதியேல், ஒப்பற்ற நின்மகட்கோர்
பழிவந்து சூழ நின்நகரத்துக் கொடி ஒன்றொடிந்து வீழுநாள் வருவன்’ என்ற
அளவிலே அவுணர் கோமான் தன் மனைக்கண் புகுந்தனன்.

உஷையின் களவொழுக்கம்

அங்கொரு நாள்அவன் பயந்த ஆயிழை
கங்குலிற் கனவினிற் கண்ணன் சேய்பெறும்
பொங்கெழில் அனுருத்தன் புல்லப் புல்லினாள்
வெங்களிப் பெய்தினள் விழிப்பக் கண்டிலாள்.    23

     ஓர்நாள் அவன் ஈன்ற அழகிய இழைகளையுடைய மகள் உஷை
இரவிடைக் கனவில் கண்ணனுக்கு மகனாராகிய பிரத்தியும்னன் பயந்த
அழகுமிகு அநிருத்தன் தன்னைத் தழுவத் தானும் எதிர் தழுவினாள்;
விரும்புகின்ற களிப்புற்றனள்; விழித்தவழிக் காணாளாய்,

கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து சோர்ந்தனள்
மெய்யணி சிதைந்துமெய் வெறுவி தாதல்கண்
டைதெனத் தன்மலர் அனங்கன் சூட்டினான்
தையல்தன் மருகியாச் சார்வ தோர்ந்தென.       24

     கையால் எற்றி அழுது கண் கலங்கித் தளர்ந்தனள், அணிகள்
நெகிழ்ந்து வீழ்ந்து உடம்பு வறிதாதல் கண்டு ‘அழகிது’ எனக் கூறி மன்மதன்
அம்புகளாகிய மலர்களைத் தொடுத்தான் அவ்வழகி தன் மருமகளாதலை
உணர்ந்தாற்போல,

களங்கனிக் கூந்தலிற் கவற்றித் தற்றெறத்
துளங்குறு பழம்பகைத் தொடர்பின் வேள்கரி
விளங்கிழை முந்துதன் வீறு காட்டலால்
இளங்கொடி முதல்அரிந் தென்னச் சாம்பினாள்.    25