| 		| அட்டழல் கழல்மறவர் ஆகமிசை எஃகம் பட்டபுழை நின்றிழிவ பாய்குருதி வெள்ளம்
 ஒட்டலரை யான்உயிர் குடிப்பல்என ஒல்லை
 உட்டிகழ் மறக்கனல் வெளிப்படு தொக்கும்.      60
 |       நெருப்பில் காய்ச்சி இயன்ற கழலினை வீக்கிய வீரர் மார்பிடை வேல்    துளைத்த துளைவழியினின்றும் செந்நீர்ப் பெருக்கு இழிதல், யான் பகைவர்
 உயிரைப் பருகுவல் என விரைவில் உள்ளே திகழ்கின்ற வீரமாகிய தீ
 வெளிப்படுவதனை ஒக்கும்.
 		| கடுங்களிறு கைக்கதை சுழற்றிஎறி கால்தேர்க் கொடிஞ்சியின் நிரைத்தகுரு மாமணிகள் உக்க
 அடும்படை வலத்தினர் தெழித்தெழும் அதிர்ப்பின்
 நெடுங்ககன மீன்நிரை நிலத்துகுவ மானும்.       	                61
 |       போர்க்களிறு கதாயுதத்தைச் சுழற்றி எறிந்தபோது தேர்க்கொடிஞ்சியிற்     பத்திபடப் பதித்த நன்னிறமுடைய பெருமை பொருந்திய மணிகள் உதிர்தல்
 வீரர் உரப்பிவரும் அதிர்ச்சியினால் நீண்ட வானின் நட்சத்திரத் தொகைகள்
 நிலத்தில் வீழ்வனவற்றை ஒக்கும்.
 		| நீள்கொடி மிசைத்துகில் அனைத்தினும் நெடுங்கோல் வாளிகள் பொதிந்தவை சிதர்ந்துவியல் வானின்
 மீளிகள் அதிர்ப்பின்உயர் விண்மிசைய தாருத்
 தாளதிர உக்கதழை போன்றன பறப்ப.          	               62
 |       நீண்ட கொடிகளிற் றுணிகள் எவற்றினும் நீண்டு திரண்ட அம்புகள்    செறிதலால் கிழிந்தவையுதிர்ந்து அகன்ற வானிலுள்ள மேகமுழக்கினைப்
 போல வீரர்கள் அதட்டொலியால் உயர் விண்ணிலுள்ள ஐந்தருக்களின்
 அடி அதிர்தலால் உதிர்ந்த தழைபோலப் பறப்பன.
 		| கைப்படை இழந்தவர் எதிர்ந்தவர் கடாவும் மெய்ப்படு பெரும்படை பறித்தெதிர் விடுப்பார்
 எப்பொருளும் அற்றுழியும் ஏதிலர்கள் நல்கும்
 அப்பொருள் கொளேங்களெனும் மானமுடை யார்போல்.   63
 |       கையிலுள்ள படைகளைப் பகைவர்மேல் வீசி உடம்பில் கோப்புண்டு    கிடந்த படையைப் பறித்துப் பகைவர்மேல், கைப்பொருள் முற்றும் இழந்து
 வறியராகியபோதும் மானமுடையார் அயலவர் அன்பொடு கொடுக்கும்
 பொருளையும் திருப்பி விடுதல் போல விடுப்பார்.
      நூழி லாட்டு: ‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல்     பறியா நகும்.’
 		| வீடினர் வயப்பொருநர் வீடின இபங்கள் மூடின நிலங்குருதி மூடின பிணங்கள்
 கூடின கருங்கொடிகள் கூடின பருந்தும்
 ஆடின மகிழ்ந்தலகை ஆடின கவந்தம்.       64
 |  |