|      இறந்தனர் வலியுடைய வீரர்; இறந்தன யானைகள்; செந்நீர் நிலத்தை    மறைத்தன; பிணங்களும் மறைத்தன; காக்கைகளும், பருந்துகளும் கூடின;
 பேய்கள் உவகைக் கூத்தாடின. உடற்குறைகள் ஆடின.
 		| எங்கணும் நிணங்குடர் இறைச்சிகொழு மூளை எங்கணும் முரிந்தசிலை வாள்பலகை எஃகம்
 எங்கணும் இறுத்தகிடு கச்சுருள் கொடிஞ்சி
 எங்கணும் முடித்தலை நிமிர்ந்தன இடங்கள்.      65
 |       யாண்டும் நிணமும், குடரும், இறைச்சியும், கொழுவும், மூளையும்,    முரிந்தனவாகிய வில்லும், வாளும், கேடகமும், வேலும், ஒடிந்த தேர்
 மரச்சுற்றும், கொடிஞ்சியும், அற்ற முடியுடைத் தலைகளும் ஆக நிவந்தன.
 		| பிணங்களொ டயர்ந்துவிழு பெற்றியரும் வீழ்தோட் கணங்களொடு தண்டமும் விசித்தகடி வள்வார்க்
 குணங்களொடு புல்லிய கொழுங்குடரும் அங்கேழ்
 நிணங்களொடு பன்மணியும் நீத்திறிய லாகா.     66
 |       பிணங்களையும், மூர்ச்சையுற்று வீழ்ந்தவர்களையும், வீழ்ந்ததோட்    குழாங்களையும், தண்டாயுதங்களையும், வீக்கிய அச்சத்தைச் செய்யும் கிழித்த
 வார்நாணிகளையும், பொதிந்த குடர்களையும், நிறமுடைய நிணங்களையும்
 பல மணிகளையும் பிரித்தறியக் கூடா ஆயின.
 		| மண்ணிடம் மெலிந்தது பிணங்குவையின் வாளோன் நண்ணிடம் மெலிந்ததுடல் விட்டுறுநர் போழ்ந்து
 விண்ணிடம் மெலிந்ததவர் துன்னிமிடை வோரை
 எண்ணிட மெலிந்தனர் விசும்பின்இமை யாதார்.   67
 |       பிணக்குவியலாற் பொறாது மண்ணிட மெலிவுற்றது; போரில் உயிர்    விட்டு வீரசுவர்க்கம் புகுவோர் சூரியனை ஊடுருவிச் செல்லுதலின் அதன்
 நடுவிடம் மெலிந்தது. அக்குழுவினர் நெருங்கி விண்ணிடம் மெலிந்தது.
 அங்ஙனம் நெருங்குவோரை எண்ணுதலாற் றேவர் குழைந்தனர்.
      போரில் இறந்தோர் சூரியன் வழியாகச் சுவர்க்கம் புகல்: ‘‘கதிருடல்     வழிபோய்க் கல்லுழை நின்றோர்’’ (கல்லாடம்)
      நள்ளிடம்-நடுவிடம்; நண்ணிடம் என மரீஇயிற்று. ‘‘நள்ளனல்’’     நண்ணனல் (சிவஞா. சூ. அதி. 2-4) எனவும், ‘நீளுல கெலாம்’ நீணுல
 கெலாம் (திருநா. கோயிற்குறுந்தொகை) எனவும் வந்தமை காண்க.
 		| மிடைந்துசமர் இன்னணம் விளைத்துழி இசைத்தேன் குடைந்ததொடை வல்லவுண வீரர்வலி குன்றி
 உடைந்தனர் நடுங்கினர் ஒடுங்கினர் சிதர்ந்தார்
 இடைந்தனர் பெயர்ந்தனர் இரிந்தனர்கள் எங்கும்.    68
 |  |