| எனக்கூறி ‘இமையவரையே அருள் கூர்ந்து காத்தருளுங் கடப்பாட்டினை     உடையோனே! இரக்கம் இல்லாத அவுணர் குலத் கொடுந்தொழிலோன்
 தன்னை வெல்ல எனக்குத் திருவருளைச் செய்’ என்றனர்.
      சோத்தம்-இழிந்தோர் செய்யும் அஞ்சலி; (சத்ததானப்படலம் முதற்    செய்யுளிலும் காண்க.)
 		| என்றிரந்து நனிவேண்டும் நெடியோனை எதிர்நோக்கிக் குன்றநெடுஞ் சிலைவல்லான் குறுமூரல் காட்டிஎமை
 வென்றன்றே வாணனைநீ விறல்கொள்வ தெம்மோடு
 மன்றபோர்க் கெழுகென்ன மணிவண்ணன் உளம்நடுங்கி.   77
 |       குறை கூறிப் பெரிதும் வேண்டும் கிருட்டின மூர்த்தியை நோக்கி     மேரு மலையை வில்லாகக் கொண்டவர் புன்முறுவல் பூத்‘தெம்மை
 வென்றன்றோ வாணனை நீ வெல்வது? ஆகலின், எம்முடன் ஐயமின்றிப்
 போர்க்கு எழுக’ என்றருளலும், நீலமணியை ஒக்கும் நிறத்தினன் உள்ளம்
 நடுங்கி,
 		| என்னருளிச் செய்தவா றெவ்வுயிர்க்கும் எளியேற்கும் மன்னவன்நீ நாயனொடு மாறிழைப்ப தெனக்கழகோ
 உன்னடிக்கீழ் மெய்த்தொண்டு பூண்டுரிமைப் பணிசெய்வேன்.
 றன்னிடத்தில் இவ்வாறோ சாமீநின் திருவருளே.      78
 |       ‘அருளிச் செய்தவாறு என்னே! எல்லாவுயிர்களுக்கும், ஒன்றுக்கும்     பற்றாத ஏழையேனுக்கும் தலைவன் நீ. தலைவனோடு பகைத்துப் போர்
 புரிவது அடிமையாகிய எனக்கழகிதோ. உன் திருவடிக்குரிய மெய்ப்பணி
 பூண்டு அதற்குரிய ஏவலைச் செய்வேன்பால் தலைவனே! நின் திருவருள்
 இவ்வாறோ வாய்ப்பது.
 		| எந்தையடி யருச்சனையால் எதிர்ந்தாரைப் புறங்காண மைந்துபெறும் யான்நின்னோ டமரேற்க வல்லுவலோ
 பந்தமுறும் உலகனைத்தும் தொழிற்படுத்தும் நின்எதிர்நின்
 றுய்ந்தவரும் உளரேயோ உபநிடதத் தனிமுதலே.    79
 |       ‘எந்தையே நின் திருவடி வழிபாட்டினால் போரில் எதிர்த்தவரை    முதுகு காட்டி ஓடச் செய்யும் வலிமை பெறும் யான் நின்னுடன் போர்
 செய்ய வல்லவனல்லேன். உபநிடதத் தனி முதல்வனே! பாசப்பிணிப்புறும்
 உலகங்கள் அனைத்தையும் இயக்கும் நின்னுடன் பகைத்து நின்று
 பிழைத்தவரும் உளரோ?’
      ‘என்னிடத்தும் பிறரிடத்தும் உள்ள ஆற்றல்கள் முற்றவும் உன்    னுடைமை. வழிபாட்டு வன்மையால் பிறரை வெல்லும் ஆற்றலைச்சிறிது
 கூடுதலாகப் பெற்றுளேன். எல்லாம் வல்ல நின்பால் ஏகசேதத்திற் பெற்றது
 கொண்டு போர்செய்ய வல்லேனோ? மலப்பிணிப்பிற் கட்டுண்டேமை
 இயல்பாகவே பாசங்களின் நீங்கிய நின் அருள் வேறு நின்றியக்கியும் உடன்
 நின்றியங்கியும் உபகரிக்கும் ஈதொழிய எமக்குப் புடை
 |