430காஞ்சிப் புராணம்


பெயர்ச்சியும் சுதந்திரமாக இல்லையே? எனும் கருத்தமையக் கிருட்டின
மூர்த்தி கூறினர். வேத முதல்வன் சிவபிரான் என உபநிடதங்களான்
அறிந்து அதனைச் சிறப்புடைய சைவ உபநிடதங்களால் தனி முதல்வன்
என அறிதல் அமையும்.

எண்ணிகந்த அண்டமுழு தொருநொடியில் எரிக்குதவும்
கண்ணமைந்த நுதலாய்க்குக் கடையேன்ஓர் இலக்கன்றே
வண்ணமெலாம் யாங்காண நீநகைத்த மாத்திரையே
அண்ணல்ஆர் புரமூன்றும் கூட்டோடே அழிந்தனவால்  80

     அளவில்லாத அண்டங்களை முற்றவும் ஓரிமைப் பொழுதில் எரிக்கு
விருந்தூட்டும் நுதற் கண்ணுடைய நினக்குக் கீழ்மையேன் திருவுள்ளத்துள்
எண்ணத்தக்க பொருளன்றே. நிகழ்ச்சிகள் யாவும் யாங்கள் கண்கூடாகக்
காண நீ முறுவலித்த அளவே பெருமை மிக்க முப்புரங்களும் உள்ளிருந்த
குழாத்தொடும் அழிந்தன.

     கூட்டம் கூட்டு என அம்முக்கெட்டு நின்றது; ‘‘(பெற்றம்) பெற்றொன்
றுயர்த்த பெருமான்’’ (திருஞா. திருப்பாசுரம்.)

துரும்பொன்றிற் புத்தேளிர் தருக்கெல்லாந் தொலைவித்தாய்
கரும்பொன்று சிலையானை நுதல்விழியாற் கனற்றினாய்
சுரும்பொன்று மலர்ப்பாதப் பெருவிரலாற் சுடர்இலங்கை
இரும்பொன்று மனத்தானை இடர்உழப்பக் கண்டனையால்.  81

     ‘நாட்டிய துரும்பொன்றில் வைத்துக் கடவுளர் இறுமாப்பை எல்லாம்
கெடுத்தனை. கரும்பு வில்லுடைய காமனை நுதற்கண்ணால் நீறாக்கினை.
வண்டுகள் மொய்க்கின்ற மலரடி விரலொன்றால் விளங்கும் இலங்கைக்
கிறையாகிய இரும்பை யொக்கும் மனத்தையுடைய இராவணனைத் துன்புறச்
செய்தனை.’

நோனாத கூற்றுவனை நோள்தாளால் உயிர்உண்டாய்
தேனாடு மலரானை நகநுதியாற் சிரங்கொய்தாய்
மீனாமை பன்றிநர வெறிமடங்கல் உலகளந்தான்
றானாம்என் பிறவிகளுந் தண்டிக்கப் பட்டனவே.      82

     ‘பொறாத இயமனை வலிய திருவடியால் உயிரைக் கொண்டாய்.
வண்டுகள் விரும்புகின்ற மலருறைவோனை நகத்தின் நுனியினால் சிரத்தைக்
கொய்தனை. வெறி ஏறிய மச்ச கூர்ம வராக நரசிம்ம திரிவிக்கிரமாவ
தாரங்களாகிய யான் கொண்ட இவ்வடிவங்கள் தண்டிக்கப்பட்டன.’

தக்கன்றன் வேள்வியைநீ தரவந்த தனிவீரன்
புக்கன்றி யழித்தநாள் என்னோடும் புத்தேளிர்
நொக்கன்று பட்டபா டெடுத்தியம்பிற் சொல்லளவின்
மிக்கன்றால் உனக்கிவையும் விளையாடற் செய்கையே.  83