|      பகைவர் வணங்கும் வாணனுடைய ஒப்பில்லாத சேனைத் தலைவராய்    அறநெறியின் வழுவாதொழுகிய அசுரர் இருவர் ஓணன் காந்தன் என
 விளங்கினர்.
 		| வன்பு பூண்ட மனவ கப்படா என்பு பூண்ட இறைவர் தம்மடிக்
 கன்பு பூண்ட அறிவின் மேலவர்
 துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார்.              3
 |       அன்பில்லாத வன்னெஞ்சினைக் கடந்து நின்ற எலும்பை மாலையாக     அணிந்த இறைவர் தம்மடிக் கன்புபூண்ட அறிவினால் மேலோராய்த்
 துன்புடைய பாசத் தொடர்பினை விலக்குவாராய்,
      இறைவனுடைய அழிவின்மையையும் பிரம விட்டுணுக்களின்    பிறப்பிறப்பையும் உணர்த்தி உய்யக்கொள்ளும் அடையாளமாவன என்பு
 மாலைகள்.
 		| ஓங்கு காஞ்சி ஊரை நண்ணினார் தேங்கு தெண்ணீர்த் தீர்த்தந் தொட்டனர்
 பாங்கி லிங்கம் பதிட்டை செய்தனர்
 ஆங்கண் அன்பிற் பூசை ஆற்றினார்.           	       4
 |       உயர்ந்த காஞ்சி நகரை அடைந்தனர். நீர் நிறைந்த தடாகம்     வகுத்தனர். அதன் மருங்கில் தனித்தனியாகச் சிவலிங்கந் தாபித்தனர்;
 அன்பொடும் பூசனை புரிந்தனர்.
 		| ஆற்றும் இருவர் அன்பு நோக்கிய நீற்று மேனி நிமலன் அம்மையோ
 டேற்றின் மேலாற் காட்சி ஈதலும்
 போற்றி இன்பப் புணரி மூழ்கினார்.            	            5
 |       புரியும் ஓண காந்தர் தம் அன்பினை நோக்கிய நீறணி மேனியராய    விமலர் உமையம்மையாரொடும் விடைமேற் றிருக்காட்சி வழங்கலும் போற்றி
 செய்தின்பக் கடலுள் திளைத்தனர் அவர்.
 		| கரைஇல் காதல் கைமி கத்தொழும் புரைஇ லார்க்குப் பொங்கு வெள்ளிமால்
 வரையி னார்இன் னருள்வ ழங்கிநீர்
 உரைமின் வேட்ட வரம்என் றோதினார்.         6
 |       எல்லையில்லாத அன்பு பெருகத் தொழும் குற்றமற்றவர்க்கு மிகுகின்ற     இனிய அருளைக் கயிலை மலையார் நல்கி நீவிர் விரும்பிய வரங்களைக்
 கேண்மின்’ என்றோதினார்.
 		| கைகள் கூப்பிக் கண்கள் நீர்உகச் செய்ய பாதந் தொழுது செப்புவார்
 ஐய னேமெய் யறிவு தந்தெமை
 உய்யக் கோடி உனக்க டைக்கலம்.               7
 |  |