|      சிறையிடைப் படுத்தினன்; சிலச்சில நாட்கள் கழிந்த பின்னர் வணங்கி    நின்று சலந்தரனை இரந்து வேண்டித் திருமாலைச் சிறை விடச் செய்தனர்.
 பிறை போலும் பற்களையுடைய அசுரனும் வெற்றிச் செருக்குடன் வாழுநாளில்,
 திருமால் செயல்	 		| இறுதிநாள் அடுத்தலின் எறுழ்விடைப் பாகனைத் தெறுவல்என் றெழுந்துயர் கயிலையைச் சேறலும்
 உறுதுயர்ச் சிறையிடை உறையும்நாள் அன்னவன்
 பெறுமனைக் கிழத்தியைக் காமுறும் பின்னைகோன்.   7
 |       ஆயுள் முடியு நாள் அடுத்தமையால் ‘வலிய விடையுடைப் பரமனை    அழிப்பேன்’ என்றெழுச்சி கொண்டுயர்ந்த கயிலையைச் சேர்ந்த சமயத்தில்
 மிக்க துயரைச் செய்யும் சிறையிற் கிடந்த நாளில் அவனுக்கு வாய்த்த
 மனையறம் பூண்ட உரியவளை விரும்பும் இலக்குமி நாயகன்,
 		| அற்றம்ஈ தென்றறிந் தம்மனைப் புறமுறத் துற்றபூம் பொழிலிடைத் தூத்தவ வடிவுகொண்
 டுற்றிடக் கண்டனள் ஒசிஇடைப் பணைமுலை
 முற்றிழை தாழ்ந்துமுன் நின்றிது வினவுவாள்.       8
 |       உரிய காலம் இதுவாகும் என்று துணிந் தம் மாளிகையை அடுத்துச்    செறிந்த பூஞ்சோலையில் தூய தவவேடம் தாங்கி இருந்திடத் துவளுகின்ற
 இடையினையும், பருத்த கொங்கையையும் உடைய தொழில் முற்றுப்பெற்ற
 அணிகளை அணிந்தவள் கண்டு நெருங்கினள், வணங்கி முன்நின்றிதனை
 வினவுவாள்:
 		| நற்றவத் தடிகளீர் நதிமுடிக் கடவுளைச் செற்றுமீள் வேனெனச் சென்றஎங் கொழுநர்பால்
 வெற்றியோ தோல்வியோ விளைவதொன் றறிகிலேன்
 எற்றிது மொழிமின்நீர் என்னமால் கூறுவான்.     	            9
 |       ‘மெய்த்தவ முடைய அடிகளீர்! கங்கையை அணிந்த சடை முடிக்    கடவுளை அழித்துத் திரும்புவேன் எனக் கூறிச்சென்ற எம்கணவர்பால்
 வெற்றியோ? தோல்வியோ விளைவ தொன்றியாதோ அதனை அறிகிலேன்
 எத்தன்மையது இது நீவிர் கூறுமின்’ என்னத் திருமாலாகிய முனிவரர்
 கூறுவார்.
 		| அஞ்சுபூ தங்களும் அவற்றிடைப் பொருள்களும் பஞ்சுதீப் பட்டது படவிழி திறந்தருள்
 செஞ்சடைப் பகவன்முன் சென்றெவர் உய்ந்துளார்
 புஞ்சவெள் வளையினாய் அறிந்திலை போலும்நீ.   10
 |  |