| வழிச் செலவால் ஒரு பொழுது தங்கினோரும் அழியாத பிறவிக்கு ஏதுவாகிய    பாசம் ஒழிப்பாராயின எந்நாளும் அங்கு வாழ்வோர் தங்கள் பயனை
 உரைக்கும் வகை எவன்?
 திருமாற் பேற்றுப் படலம் முற்றிற்று.	     ஆகத் திருவிருத்தம்-1511	     பரசிராமேச்சரப் படலம்	 அறுசீரடி யாசிரிய விருத்தம்	      சுழிபாடு படும்உந்தி மலைமகளும் யோகியரும் துழாயினானும்,    வழிபாடு செயவைகும் மணிகண்டர் மாற்பேறு வகுத்தாம் பண்கள்,
 கொழிபாடற் சுரும்பினஞ்சூழ் மருப்பொதும்பர் மாற்பேற்றின்
 குணபால் வேந்தர், பழிபாடிக் கொலைசெய்தோன் பரசிரா
 மேச்சரத்தின் பான்மை சொல்வாம்.                         1
      நீர்ச்சுழி தனது பெருமையை இழத்தற்கு ஏதுவாகிய கொப்பூழையுடைய    உமாதேவியாரும், யோகியரும், திருமாலும் வழிபட எழுந்தருளியிருக்கும்
 திருநீலகண்டரது திருமாற்பேற்றினை வகுத்துரைத்தோம். பண் தெள்ளும்
 பாட்டிசைக்கும் வண்டினங்கள் சூழ்கின்ற மணமுடைய சோலையையுடைய
 திருமாற்பேற்றிற்குக் கிழக்கில் வேந்தருடைய பழிச்செயல்களை யாவரும்
 அறிய எடுத்தோதிக் கொலை புரிந்தோன் தாபித்த பரசிராமேச்சரத்தின்
 நிலைமையைக் கூறுவோம்.
 இரேணுகை கொலையுண் டெழுதல்	      சிவம்பழுத்த பிருகுமுனி இடுஞ்சாபத் தொடர்ச்சியினால்     திருமால் முன்னாள், தவம்பழுத்தா லனையசம தக்கினியோ
 டிரேணுகைக்குத் தநய னாகி, அவம்பழுத்த  குறும்பெறியும்
 இராமன்என வைகுறுநாள் அன்னை பால்ஓர், நவம்பழுத்த
 தீங்குணர்ந்து தன்தாதை தனைஏவ நாடித் தேறி.             2
      சிவஞானங்கனிந்த பிருகு முனிவர் கொடுத்த சாபத் தொடர்பால்     திருமால் முன்னோர் காலத்தில் தவம் முதிர்ந்தாற் போன்ற சமதக்கினி
 முனிவரோடு இரேணுகைக்கு மகனாகிப் பாவம் பயக்கும் குறும்பா ஆகிய
 |