நாய்களை மேற்சொல்ல முடுக்கிக் குற்றப்பட இகழ்ந்து கூறித்திரண்ட கல்லும் ஓடும் எடுத்து அணங்கினை ஒருபாலுடைய பிரான் வலிவுற வீசித் தாக்குழி அப்பெரு முனிவரன் வெவ்விய தீயை ஒப்ப வெகுண்டனனாய்த் தண்டாயுதத்தை எடுத்துச் சுழற்றி, ஞாளிகள் தம்மை அதுக்கினன் நள்ளலர் ஊர்செற்ற மீளியின் மேற்செல விட்டனன் வேழ முகக்கோன்அக் கோளுறு தண்டம் முரித்திரு கூறு படுத்திட்டான் காளியொ டாடிய கண்ணுதல் வெய்ய கதங்காட்டி. 23 | உதட்டைக் கடித்து நாய்களைப் பயமுறுத்தினன். பகைவர் முப்புரங்களை எரித்த சேவகன்மேற் செல்ல அத்தண்டத்தை விட்டனன். யானை முகப்பிரானார் அவ்வலியமைந்த தண்டத்தை ஒடித் திரு துண்டாக்கினர். காளியுடன் வாது செய்து நடம்புரிந்த பிரானார் வெவ்விய சினம் தோன்ற நடித்து, வன்மொழி கூறிப் புலையர் தொழுத்தை மகனாம்நீ என்மகன் நோவத் தண்டம் எறிந்தாய் தெய்வத்தால் அன்னது பக்கது தாய்கொலை அஞ்சாய் அருளில்லாய் நின்னை இனிக்கொல் வேனென நேர்ந்தான் கரம்ஓச்சி. 24 | கடுஞ்சொற் கூறிப் ‘புலையருள் அடிமைப்பெண் மகன் ஆவாய் நீ என்மகன் மேல் வருந்துமாறு தண்டம் எறிந்தனை. தெய்வானுக்கிரகத்தால் தண்டம் முரிந்தது. தாய் கொலை அஞ்சாதவனே! அருளில்லோனே! இப்பொழுது உன்னைக் கொல்வே’னெனக் கரத்தை ஓச்சி நெருங்கி வந்தனர். நேர்ந்திடு காலையில் நீள்மறை ஞாளிகள் முன்னாகச் சார்ந்து துரந்து முடுக்கலும் அத்தகை யான்அச்சங் கூர்ந்து பதைப்புடன் ஓடினன் வெண்சிறு கூன்திங்கள் வார்ந்த சடைப்பெரு மானும் விரைந்து தொடர்ந்துற்றான். 25 | நெருங்குகையில் நீண்ட வேதநாய்கள் முற்படச் சார்ந்து துரத்தி ஓட்டுதலும், அத்தவமுனி அச்சம் மிகுந்து உள்ளம் பதைபதைத்து ஓட்டெடுத்தனன். இளம் பிறையை அணிந்த நீண்ட சடையுடைப் பெருமானாரும் விரைந்து தொடர்ந்தனர். அறுசீரடி யாசிரிய விருத்தம் ஒற்றையங் கரத்தாற் பற்றிக் கோடலும் உடையான் தீண்டப் பெற்றுமெய்ப் புளகம் போர்ப்பப் பெரிதுளம்மகிழ்ந்தான் இச்சீர்ப் பற்றியும் இழிஞன் தீண்டப் படுபெருஞ் சங்கை கொண்டு முற்றவெந் துயரின் மூழ்கி வெகுண்டனன் மொழித லுற்றான். 26 | |