|      ஓர் கரத்தால் பற்றிக் கொள்ளுதலும் உடையவன் தீண்டப்    பெற்றமையால் மயிர்க்கூச் செறிதலால் பெரிதும் உள்ளம் மகிழ்ந்தனன்.
 இச்சிறப் புண்டாகியும் இழிசனனால் தீண்டப்படும் பெருங்கவலையைமனங்
 கொண்டு முற்றவும் கொடுந் துன்பத்தில் மூழ்கிச் சினங்கொண்டனனாய்
 மொழிதலுற்றான்.
 		| மறிகடல் வரைப்பின் யாங்க ணாயினும் மறையோன் றன்னைப் பொறிஇலி இழிந்த வாழ்க்கைப் புலைமகன் வெருவ ராமே
 செறிஅழுக் கடைந்த கையால் தீண்டுமே அவ்வச் சாதி
 பிறிவினிற் பிறழா வண்ணம் பிஞ்ஞகன் நடாத்துங் காலை   27
 |       ‘அவரவர் வருணப் பிறிவொழுக்கத்தில் திரிபின்றிச் செல்லச்     சிவபிரானார் ஆணை செலுத்துங்காலை, மறித்து வீசுகின்ற அலைகடல்
 சூழ்ந்த அவனியில் எங்காயினும் அறிவிலியாகிய இழிந்த வாழ்க்கையை
 யுடைய புலையோன் பயப்படாமே செறிந்த அழுக்குடைய கையால்
 வேதியனைத் தீண்டுவனோ?’
 		| இன்னினி உனது சென்னி இறுவது தேற்றங் காண்டி புன்னெறிக்குலத்தோய் என்னப் புகன்றுதன் உளத்தேவெம்பிப்
 பன்னரும் புலையன் றன்பால் பட்டுளேன் அந்தோ சீசீ
 என்னுடைத் தவமும் யானும் அழிந்தவா றெனப்பு ழுங்க.  28
 |       ‘இழிந்த ஒழுக்கமுடைய குலத்தவனே! இப்பொழுதே உன் தலை    குறைபடுவதனை நிச்சயமாகக் கண்டுகொள்? என்று கூறிக் கோபித்துப்
 ‘பேசவும் தகாத புலையன் வயப்பட்டேன். அந்தோ! சீ சீ! யானும், என்
 தவமும் அழிந்த வகை என்னே!’ என்றுள்ளங் கொண்டு வெதும்ப,
 		| விழிபயில் நுதலும் முந்நீர் விடம்பொதி மிடறுங் கூர்வாய் மழுமறிக் கரமுஞ் செங்கேழ் வடிவமும் கரந்து சாலக்
 கழிபுலை வேடந் தாங்கி யெழுந்தருள் கருணைத் தோன்றல்
 இழிவறும் இராமன் கூற்றுச் செவிமடுத் தினைய சொல்வான்.   29
 |       நுதற் கண்ணும், கடல் விடத்தைப் பொதிந்த கண்டமும், திருக்கரத்து    மழுவும், மானும், சிவந்த திருமேனியும் ஆகிய இவற்றை மறைத்து மிக
 இழிந்த புலை வடிவங் கொண்டெழுந்தருள் கருணைப் பெருமான் இழிவு
 நீங்கும் இராமனது மொழியைத் திருச்செவி ஏற்றிதனை அருளுவார்.
 		| வடுவறு மறைவ லாளர் மரபினை யெனில்யான் தீண்டப் படுகுவை யல்லைநீதான் பார்ப்பனக் கடைய னாவை
 அடுதொழிற் புலையன் யான்அவ் வொழுக்கினிற் சிறந்த வாற்றால்
 இடுகிடைத் தாயைக் கொன்றோய் என்னினுங் கடையன் நீகாண்.	  30
 |       ‘மறைவழி நின்றொழுகுவோர் மரபினில் வந்த குற்றமற்ற தூயை நீ     எனில் என்னால் தீண்டப்படமாட்டாய், பார்ப்பனருட் டோன்றிய கரும
 |