| பரசிராமன் துன்புறுதல்	 		| மறையொ ழுக்கம் வழாநெறி வாய்மையோர்க் கிறைவ னாம்முனி வன்குலத் தெய்தினேன்
 நிறைய வேதமும் அங்கம் நியாயமும்
 முறையின் ஓதினன் மூவறு கல்வியும்            39
 |       ‘வேத வொழுக்கத்தி னின்றும் வழுவாத உண்மையாளர்க்குத்     தலைவராகும் முனிவர் மரபிற் பிறந்தேன்.  வேதங்களும், அங்கங்களும்,
 நியாய நூலும் பதினெண் புராணமும் முறைப்படி முற்றவும் ஓதினேன்.’
 		| பன்னெ டும்படை யாவும் பயின்றுளேன் இன்ன னாய எனக்கிது காலையின்
 முன்னை வல்வினை மூட்சி விளைந்தவா
 றென்ன பாவம் எவர்இது தாங்குவார்.           40
 |       ‘போர்க்குரிய படைக்கலப் பயிற்சி யுடையேன். கற்றுத் துறை போய     எனக் கிதுபோதில் முற்பிறப்புக்களிற் செய்த தீவினைமுதிர்ச்சியின் பயனாய்
 வெளிப்பட்ட வகை என்னே போலும்! எவரே என்போல இத்துணை
 இடும்பைக்கிலக்காவர்.’
 		| என்னை ஈன்றவள் வெம்பழி எய்துறீஇக் கொன்னும் என்னாற் சிரங்குறை பட்டனள்
 பின்னர் எந்தையும் பேதை அரசனால்
 சென்னி இற்றுச் சிதைந்தனன் அம்மவோ.       41
 |       ‘என்னைப் பயந்த தாய் கொடிய பழி சுமந்து வருந்தும் என்னாற்றலை    அறுபட்டனள். பின்னர் என்றந்தையும் அறிவிலியாகிய காத்த வீரியனால்
 சிரமிழந்து உயிர் விட்டனன். அந்தோவே!
 		| ஈண்டு மற்றும் இழிஞன் புலைக்கரந் தீண்டி என்னை அவமதி செய்திட
 மூண்ட வெம்பழி மூழ்கியும் ஐயவோ
 மாண்டி லேன்உயிர் வல்வினை யேனரோ.       42
 |       ‘மேலும் இத்தவ நிலையினும் புலையன் றன்னுடைய இழிந்த    கரங்களால் தீண்டி என்னைப் பழித்திட, முதிர்ந்த கொடிய பழிகளில்
 மூழ்கியும் ஐயகோ! உயிர் விடுகிலேன் தீவினையேன்!’
 		| கவள மாகக் கடல்விடம் உண்டருள் சிவனை ஏத்துநர் செல்லல் உறார்களால்
 பவன்அ டித்துணை பற்றியும் என்இடர்க்
 கவதி கண்டிலன் அற்புதம் அற்புதம்.          43
 |       கடலில் உதித்த விடத்தைக் கவளம்போல உண்டருள் செய்    சிவபிரானைப் போற்றுநர் துன்பம் அடையார்கள். பிரான் அடித்துணையைப்
 பற்றியும் என் துன்பத்திற்கு முடிவு காண்கிலேன். வியப்பிது வியப்பிதே!
 |