| 		| பின்றாழ் சடிலத் திறையோய்பிழை ஒன்றும் இல்லா என்றாதை யாகுஞ் சமதக்கினி என்னும் அஞ்சும்
 வென்றான்றனை யேகய வேந்தன் அருச்சு னன்றான்
 கொன்றான் அவனைக் குலத்தோடறக் கொன்ற ழித்து.   55
 |       ‘பின்றாழ் சடைமுடிப் பெருமானே! சிறு பிழையும் செய்யாத எனக்குத்     தாதையாகும் சமதக்கினி முனிவரைக் கீழ்மைக்குணமுடைய காத்த
 வீரியார்ச்சுனன் என்னும் அரசன் கொன்றனன். அவனை அவன்
 குலத்தோடும் கொன்றழித்து,
      ‘பின்றாழ் சடைமேல்’ (திருநறையூர்ச் சித்தீச்சரம்)	 		| எந்தைக்கவர் தங்குரு திப்புனல் அங்கை ஏந்தி நிந்திப்பறு தர்ப்பணம் ஆற்றிய சிந்தை நேர்ந்தேன்
 அந்தத்திறல் உன்அடி யேற்கருள் என்ன ஐயன்
 வந்திக்கும் மழுப்படை மீது கடைக்கண் வைத்தான்.   56
 |       ‘அவர் தம்முடைய செந்நீரைக் கொண்டு என் தந்தைக்குப் பழிப்    பில்லாத தருப்பணஞ் செய்ய விரும்பினேன். அதற்கு வேண்டும் ஆற்றலை
 அடியேனுக் கருளென்று வேண்டப் பெருமானார் யாவரானும் போற்றப்
 பெறும் மழுப்படை மீது திருக்கடைக்கண் சாத்தினர்.
 		| திருஉள்ளம் உணர்ந்து கணிச்சி திருந்து தன்கூற் றொருதிண்படை ஆக்க உவற்கது நல்கி எங்கோன்
 பெருவெண்களி றாளி தடுப்பினும் பேண லாரைச்
 செருவின்கண் விடாது செகுத்தனை வெற்றி கொள்வாய்.  57
 |       பெருமானின் திருக்குறிப்பினை அறிந்து அம்மழுப்படை, தன்     கூற்றினின்றும் ஓர் மழுவினைத் தோற்றுவிக்க இராமனுக்கு எமது பெருமான்
 அதனை வழங்கி ‘இந்திரனே பகைத்தெதிர் நிற்பினும் பகைவரைப்
 போர்க்களத்தில் அழித்து வெற்றி கொள்வாயாக,’
 		| பரசுப்படை பெற்றனை அப்பெயர் பற்றி வாழ்கென் றரவச்சடை அங்கணன் இன்னருள் செய்ய அன்னோன்
 மரபிற்றொழு திவ்விலிங் கத்து மகிழ்ந்து வாழ்வாய்
 புரம்அட்டருள் புண்ணிய இப்புனல் யாறுமூழ்கி.       58
 |       மேலும் பரசாயுதம் பெற்றமையின் பரசுராமன் என்னும் பெயர் பெற்று    வாழ்க” என அரவம் பூண்ட சடை முடியினையுடைய அங்கணர் இனிய
 அருளைப் புரிய, அப்பரசிராமர் விதிப்படி வணங்கி ‘‘முப்புரத்தை அழித்து
 நல்லோர்க்கருளும் புண்ணியரே! இவ்விலிங்கத்துள் வீற்றிருந் திருப்பாலியாற்று
 நீரில் மூழ்கி”
 		| கற்றைக்கதிர் வெள்ளொளி கான்றிருட் கட்ட றுக்குங் கொற்றச்சசி நாள்முதல் நாள்களிற் கொள்ளும் என்பேர்
 பற்றிப்பயில் இவ்விலிங் கம்பணிந் தன்பர்க் கேன்ற
 தற்றைப்பகல் நல்குநர் எய்துக ஆக்கம் வீடு.        59
 |  |