|      மகனால் இழந்த உயிரை மீளப்பெற்ற மாட்சிமை யுடைய இரேணுகை    நலமிக்க கணவனை இழந்த துன்பத்துடன் தன் மகன் எண்ணுதற்கரிய
 சிறப்பினை வரமாகப் பெற்றதனை மனங்கொண்டு அவன் கருத்தின் வழியே
 குறித்த இடத்தை அடைந்தனள்.
 		| இளங்களி வண்டினம் இமிரும் பூம்பொழில் வளங்கமழ் காஞ்சியை மருவி மைந்தனார்
 உளங்கொள வழிபடு நகரின் ஊங்குற
 விளங்கொளிச் சிவக்குறி விதியின் தாபித்தாள்.     20
 |       வண்டுகள் குழாமாக ஒலித்துச்சூழ்கின்ற வளமுடைய சோலைகள்     பரவியுள்ள காஞ்சிபுரத்தினை அடுத்துத் தன்மகனார் மனம்பொருந்தி வழிபாடு
 செய்த பரசிராமேசத்தின் அயலே விளங்குகின்ற ஒளியினையுடைய சிவலிங்க
 மூர்த்தியை நூன்முறைப்படி நிறுவினாள்.
 		| மகவிடத் திருத்துபே ரன்பின் மாட்சிமை தகவுறப் பூசனை தவாது பல்பகல்
 அகமுறப் புரிவுழி அருளி ஆங்கெதிர்
 நகமடப் பிடியொடும் நம்பன் தோன்றினான்.      	              21
 |       தாய் தன் மகவினிடத்து வைக்கும் பேரன்பினது மாண்புடைமையை     ஒப்பப் பேரன்பு வைத்துப் பூசனையை ஒழியாது பன்னாள் மனம் பொருந்தப்
 புரிந்து வருநாள் கருணை கூர்ந்து நம்பி அடையத்தக்க பெருமானார்
 மலையரையன் மகளாராகிய இளைய பெண் யானையை ஒப்பாருடன்
 ஆங்கெதிரே திருக்காட்சி தந்தார்.
 		| நுண்ணிடை இரேணுகை மடந்தை நோக்கினாள் உண்ணிகழ் காதலின் உருகிக் கைதொழூஉ
 வண்ணமென் குயிலினஞ் சமழ்ப்ப வாய்திறந்
 தண்ணலைப் பழிச்சிநின் றறைதல் மேயினாள்.     22
 |       நுண்ணிய இடையினையுடைய இரேணுகை நோக்கி எழுகின்ற    விருப்பினால் உள்ளம் உருகிக் கையாற் றொழுது அழகிய மெல்லிய
 குரலினையுடைய குயிலினங்கள் நாணும்படி வாயைத்திறந்து இனிய
 இசைப்பாக்களால் பெருமானாரைத் துதி செய்து நின்று கூறத் தொடங்கினாள்.
 		| ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ தாதைதாய் இமவரைத் தைய லாகுமால்
 கோதறும் இருமுது குரவர் மாட்டெவர்
 மேதகு மானம்விட் டியம்பி டாதவர்.             23
 |       ‘‘ஏனையோரிடத்து கூறத்தகாதனவும் குற்றமறுக்கும் இருமுது     குரவராகிய தாய் தந்தையரிடத்தே மேன்மை பொருந்திய நாணத்தைக்
 |