| 		| வாமதேவன் என்னும் மாமுனி காமர் அன்னை கருவின் வைகுநாள்
 பேமு றுத்தும் பிறவி அஞ்சினான்
 ஏமு றாமை இதுநி னைக்குமால்.                 2
 |       வாமதேவன் என்னும் பெருமுனிவர் விரும்புகின்ற தாயது  கருப்பை    யிற்றங்குநாளில் அச்சப் படுத்தும் பிறவியை அஞ்சினார்; வருந்தி இவ்வா
 றெண்ணுவர்.
      ‘‘தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவது  தூயபிறவாமை     ஒன்றே-சோமேசா’’ 		(சோமேசர்-   )
 		| பொதியும் மாயப் புவியில் தோன்றிநான் மதிம யங்கி மற்றும் இன்னணங்
 கொதிபி றப்பிற் கொட்பு றாதெனக்
 கதிப னேஇங் கருளிச் செய்என.               		                  3
 |       நிலையாமை நிறைகின்ற பூமியில் பிறந்து நான் அறிவு மயங்கி     மேலும் இவ்வாறு வருத்துகின்ற பிறப்பிற் சுழலாது எனக்குத் தலைவனே!
 இந்நிலையே அருள்செய்’ என்று வேண்ட,
 		| தோற்றம் ஈறில் லாத சோதிவெள் ளேற்றி னானை இதயத் தன்பினால்
 போற்று காலை புனிதன் ஆண்டுறீஇச்
 சாற்ற லுற்றான் தவமு னிக்கரோ.              		                   4
 |       பிறப் பிறப்பில்லாத பேரொளியாகிய வெள்விடையினானை உள்ளத்தில்     அன்பொடு நினைக்கும் அந்நிலையில் தூயோன் ஆங்கு வெளிப்பட்டுத்
 தவமுனிவர்க்குக் கூறத்தொடங்கினர்.
      யாண்டும் உடனிருந்துதவுவோன் ஆண்டு வெளிப்பட்டனன் என்க.    கருப்பையில் அருளுதல்; எங்கேனும் ........தன்னடியார்க்கு, அங்கே வந்தருளல்.
 		| மண்ணின் மீது தோன்றி மற்றெமை நண்ணிக் காஞ்சி நகரிற் பூசனை
 பண்ணு மோவெம் பவத்தொ டக்குனை
 அண்ணு றாதென் றருளிச் செய்தனன்.           5
 |       ‘புவியிடைத் தோன்றிக் காஞ்சி மாநகரை நண்ணி அங்குப் பூசனை    செய். கொடிய பிறவிப்பாசபந்தம் உன்னை அணுகா’ தென்றருளினர்.
 		| வள்ளல் புகலும் மாற்றங் கேட்டனன் உள்ளம் மேன்மேல் உவகை பூத்தனன்
 பள்ள முந்நீர்ப் படிமி சைப்பிறந்
 தெள்ள ருஞ்சீர்க் காஞ்சி எய்தினான்.           6
 |  |