| 		| அன்னத் தோன்றல் அடிகள் போற்றி விடைகொடு நன்னர்க் காஞ்சி நகரம் நண்ணி நாயகன்
 றன்னைத் தாபித் தேத்திச் சாவா மாட்சியின்
 மன்னப் பெம்மான் உதவப் பெற்று வாழ்ந்தனர்.   	               5
 |       பிரமனை வணங்கி விடைகொண்டு நலமுடைய காஞ்சியை நண்ணிப்    பிரானை இருத்திப் புகழ்ந்து இறவாத இயல்பினில் நிலைபெறும்படி பெருமான்
 அருள் செய்யப் பெற்று வாழ்ந்தனர்.
 		| சுவேதன் என்பான் வாழ்நாட் கழிவு துன்னுநாள் சுவேதந் தீற்று மாடச் சூழல் அதனிடைச்
 சுவேத நல்லான் ஊர்தி நோன்தாள் தொழுதனன்
 சுவேத நீற்றான் நீத்தான் இறவித் துன்பமே.       6
 |       வெண்ணிற விபூதியினனாகிய சுவேதன் இறக்குந் தருவாயில்,     வெண்சுதை தீட்டிய மாடங்களைக் கொண்ட இறவாத்தானத்தில் வெண்ணிற
 நல்விடைப் பிரானாருடைய இயமனை உதைத்த வலிய தாளைத் தொழுது
 இறப்பினால் வருந் துன்பத்தைத் தவிர்த்தனன்,
 		| மார்க்கண் டேயன் அங்கண் போற்றி மறலியைத் தாக்கி நிலைமை பெற்றான் சாலங் காயினன்
 ஆக்க மைந்தன் மகனும் அங்கண் ஏத்துபு
 சாக்கா டற்றான் கணநா தச்சீர் தழுவினான்.       7
 |       மார்க்கண்டேய முனிவர் அங்கு வழிபாடு செய்து இயமனைத் தாக்கி     இறவாத நிலைமையைப் பெற்றனர். சாலங்காயினர்க்கு மகன் மகனாகிய
 பெயரனும் அவ்விடத்தில் ஏத்தி இறப்பொழிந்து கணநாதர் பதத்தினைப்
 பெற்றனன்.			ஆக்கம்-மேன்மேலுயர்தல்.
 		| ஆயுள் மாய்வின் இன்னும் அங்கண் எண்ணிலர் தூய அன்பின் தொழுது நிலைமை பெற்றனர்
 ஏய வாற்றால் ஆயுள் வேட்டோர் யாவரும்
 பாய சீர்த்தி இறவாத் தானம் பணிகவே.         8
 |       மேலும் அவ்விடத்தளப்பிலார் ஆயுள் முடிவு நாளில் உள்ளன்பொடும்    தொழுது என்றும் வாழும் நிலைமையை எய்தினர். பொருந்தும் இம்முறையால்
 வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவோர் யாவரும் பரவிய மிகு
 புகழுடைய இறவாத்தானத்தில் வழிபடுக.
 இறவாத்தானப் படலம் முற்றிற்று	     ஆகத் திருவிருத்தம்-1668	 |