496காஞ்சிப் புராணம்


     மயங்குகையில் நாத தத்துவம் ஒளிவடிவாய் எழுந்து முன்னர் ‘ஓம்’
எனவும் ‘உமை’ எனவும் இருபகுப்பாய்ப் பின்னர் இரண்டன் சேர்க்கையால்
இருக்கும், சிவ நெறியைப் பயக்கின்ற எசுரும், சாமமும் என மூன்று
வேதங்களாய் நிலைபெற விரிந்து அவ்வேதங்கள் தத்தம் வலிமையையே
மதித்து நிற்கும் அத்தேவர் முன்னே விரும்பத் தக்க அழகிய திருவுருவொடு
நின்றிவ்வகை இரக்கத்தால் கூறும்,

     எவனடி மறையவர் மகவினையால் இருவினை வலிகெட
வழிபடுவார், எவன்அரி அயன் எனும் நுமைஒருதன் இடவல வடிவினில்
வரஅருள்வோன், எவன் நுமை நும்பதம் உறநிறுவும் இறையவன்
நுமதிருள் கழியவரும், அவனது குறிஇது அறிமின் எனா அருள்வழி
வருமறை யவைபுகல.                                     13

     வேதியர் இருவினையின் வலிமை அழிய வேள்வியால் எவனடியை
வழிபடுவார்? அரியும் அயனும் ஆகிய உங்களை ஒப்பற்ற தன்னுடைய
வடிவினில் முறையே இடத்தினும் வலத்தினும் வர அருள் செய்வோன்
எவன்? உங்களை உம் பதத்தில் நிறுவும் இறைவன் எவன்? உம்முடைய
அறியாமை கெடவரும் அவன்றன் அருட்குறி இது என்றறிமின் என்
இறைவன் ஆணையிற்றோன்றிய வேதங்கள் கூற,

அயனும் அரியும் துதித்தல்

     நறைகமழ் துளவணி தொடையவனும் நகைமல ரணைமிசை
மறையவனும், மறைமொழி செவியுற மயல்கழிவுற் றலைகடல்
வரும்விடம் அமுதுசெயும், இறைவனை முறைமுறை பரசின ரால்
எனையுடை முதல்வனும் அவரெதிர்நின், றுறைபெரு மயலினை
இனிவிடுமோ உதவுதும் விழைவன உரைமினென.               14

     துழாய் அணிந்தமாலும், பிரமனும் மறைமொழியைக் கேட்டு மயக்கம்
நீங்கிப் பாற்கடலிற்றோன்றியவிடத்தை அமுது செய்யும் இறைவனை முறை
முறையே துதிசெய்தனர். என்னை அடிமையாகவுடைய முதல்வனும் அவர்கள்
முன் நின்று ‘தங்கிய பெருமயக்கை இப்பொழுது விடுமின் விரும்பியவற்றைக்
கூறுமின் உதவுவோம்’ என்றருள,

     பங்கயன் இருகரம் உச்சிமிசைப் பயில்வுற அடிதொழுதுளம்உருகி,
எங்குறை இன்று பொறுத்தருளி எளிவரு நாயக உனைஉணரா, துங்குறு
மயல்இனி எனைஅணுகா துன்புடை நிலைபெறும் அன்புதவி, மங்கலில்
ஊழிதோ றென்வடிவில் வந்தரு ளெனமொழி விண்டனனே       15

     பிரமன் தன்னுடைய இருகரங்களும் சிரமேற்குவியத்திருவடிகளைத்
தொழுதுள்ளம் உருகி எம்முடைய குற்றங்களை இந்நாள் பொறுத்தருளி
எளிவந்த நாயகனே!  உன்னை உணராது முன்னுற்ற மயக்கம் இனி என்னை
அணுகாது உன்கண் என்றும் மாறாத அன்பினை உதவிக் கிளர்ச்சியுடைய
படைப்புக் காலந்தோறும் என்னுதலிற்றோன்றி சிருட்டிக்கும் முறையை
அருளுக என வேண்டினன்.