பொன்மயமான குளிர்ந்த சிகரங்களையுடைய இமாசலனுக்கு மகளார் கூறியவற்றைத் திருச்செவியிற் சாத்தி விளங்குகின்ற வெள்ளிய திருநீற்றினை அணிந்த சுந்தரப் பிரானார் வாய்மலர்வார்: ‘செவ்வரி பரவிய விழியுடை யோய்! கேட்பாயாக. உள்ளங் கலங்கி வருந்தாதே. தேவர் காரியமாக உன்னைக்காளி என்றழைத்தோம். நன்மையுண்டாக உலகை என்றும் காத்தல் நங்கடமை ஆதலின் என்றறிதி’. மற்றது பின்னர்த் தெளிதிநீ கவுர நிறம்பெறு மாறுனக் குரைப்பல், வெற்றிடம் இன்றி எங்கணும் நிறைந்து பரவெளிப் பரப்பிடை மேவும், பெற்றியன் யானே யாயினுந் தகைசால் பீடுயர் தலங்களின் மாட்டும், அற்றமில் மறையோர் அகத்தினும் உலவா அருள்சுரந் தினிதுவீற் றிருப்பேன். 15 ‘அத்தேவர் கருமத்தைப் பின்னர் உணர்தி நீ. பொன் நிறத்தைப் பெறு முறையை உனக்குக் கூறுவேம். வெற்றிடம் இன்றி யாண்டும் நிறைந்து பரமாகாசத்தில் விரும்பி நிற்கும் நிலையையுடையேம் யாம். ஆயினும், நவம் அமைந்த பெருமையால் உயர்ந்த தலங்களிலும், குற்றமற்ற வேதியரின் மனத்திலும் வற்றாத அருள் பாலித்து இனிதாக வீற்றிருப்போம். அண்டத்தும்,பிண்டத்தும்அமர்ந்துள்ளோம். மேம்படும் அவற்றின் உத்தமத் தளிகள் விதியுளி மறைநெறி ஒழுக்கம், ஓம்பிமிக் குயர்ந்தோர் உள்ளமும் எனக்குச் சிறந்தன அவற்றினும் மேலாய்த், தேம்பொழில் வேலிக் காசிமா நகரும் யோகிகள் சிந்தையுஞ் சிறந்த, வாம்பகர் அவற்றிற் காஞ்சியும் உண்மை அடியவர் உள்ளமுஞ் சிறந்த. 16 ‘மேன்மை பெறும் அவ்விருவகையினும் தலைமை அமைந்த தலங்களுள், நூன்முறை தெரிந்து சீலத்தொழுகும் ஒழுக்கம் மிக்கமையால் உயர்ந்தவர் உள்ளமும் எமக்குச் சிறந்தன. அவற்றினும் மிக்கதாய்த் தேன் மருவிய சோலை வேலியாக அமைந்த காசிமாநகரும், யோகிகள் சிந்தையும் சிறந்தன ஆகும். பேசப்பெறும் அவற்றினும் காஞ்சியும் மெய்யடியார் உள்ளமும் சிறந்தன ஆகும்.’ தகைபெறும் அவற்றின் வேறெனக் கினிய தானம்மற் றெங்கணும் இல்லை, நகைமலர்க் கொடியே அந்நகர் எய்தி நயந்தெனை அருச்சனை யாற்றி, மிகையறு தவத்தான் வேட்டவா பெறுதி என்றலும் விளங்கிழை உமையாள், பகைவினை துரக்குங் காஞ்சியின் எய்திப் பஞ்சதீர்த் தக்கரை ஞாங்கர். 17 ‘சிறப்புறும் அவற்றினும் வேறாக எமக்கினிய தலம் வேறெவ்விடத்தும் இல்லை. ஒளியுடைய மலர்க்கொடியே! அக்காஞ்சியை அடைந்து எம்மை விரும்பிப் பூசனை புரிந்து குற்றமற்ற தவத்தினால் விரும்பிய கவுர நிறத்தைப் பெறுதி என்றருளலும், விளங்குகின்ற அணி |