வீராட்டகாசப் படலம் 505


களைப் பூண்ட உமையம்மையார் பகையாகிய வினையை ஓட்டும் காஞ்சியினை
அடைந்து பஞ்ச தீர்த்தக்கரை மருங்கில்,

     மாதவம் இயற்றிப் பொன்னுருப் பெற்றுக் கவுரியாய் வயங்கினள்
இனைய, மேதகும் இறும்பூ தென்னெனப் புகல்வேன் வெறிமலர்ப்
பங்கயத் தவிசின், மாதர்வாள் நகையாய் என்றெடுத்துரைத்தான்
மந்தரம் அலமரச் சுழற்றி, ஓதநீர் அளக்கர் அமுதெடுத் திமையோர்க்
கூட்டிய பெருந்திறற் குரிசில்.                              18

     பெருந்தவம் புரிந்து பொன்னிற வடிவம் பெற்றுக் கவுரியாய்
விளங்கினர். மணக்கும் தாமரை மலரை இருக்கையாக வுடைய அழகிய ஒளி
மலர்கின்ற புன்னகையினளே! மேன்மையுறும் வியப்பினைப் பயக்கும்
இந்நிகழ்ச்சியை என்னெனக் கூறுவேன்! என்றுரைத்தனர். மந்தர மலையைச்
சுழலச் சுழற்றிக் கடலினின்றும் அமுதெடுத்துத் தேவரை நுகர்வித்த
பேராற்றலுடைய திருமால்.

திருமகள் வேண்டுகோள்

     செய்யவள் கேட்டு வியப்புமீக் கூர்ந்து செப்புவாள் என்னை
ஆளுடையாய், ஐயஇச் செயலைக் கேட்டொறும் உலவா அற்புதம்
பயக்குமால் மன்ற, மெய்யுணர் வின்பச் சத்தியும் சிவனும்
விளைக்கும்இவ் விளைவுக ளெல்லாம் மையறத் தெளிந்தோர்
திருவிளையாட்டின் வண்மைஎன் றியம்புவர் மன்னோ.           19

     திருமகள் கேட்டிறும்பூதுற்றுத் தன்நாயகனுக்குக் கூறுவாள்: ‘‘எனக்கு
நாயகனே! வியத்தற்குரிய இந்நிகழ்ச்சியைக் கேட்குந்தோறும் வற்றாத
அதிசயத்தை உண்டாக்கும் நிச்சயமாக. சச்சிதானந்த வடிவுடைய சத்தியும்
சிவனும் ஆக்கும் நிகழ்ச்சிகள் எவற்றையும் மயக்கமறத் தெளிந்தோர்
திருவிளையாடலின் பயன் என்றறிவிப்பர்.”

     இற்றலாற் காமற் காய்ந்துமுற் றுணர்ந்து வரம்பில்இன் புடையஈ
சனுக்கு, மற்றெவன் உளதோ அவ்விளை யாட்டும் உலகெலாம்
உய்யுமா றன்றே, அற்றென உணராக் கயவர்கள் காமத் திறமெனக்
கருதுவர் அனையர், பெற்றியை யாரே தெளிதரற் பாலார் பிறங்கொளி
மணிநிறக் குரிசில்.                                      20

     ‘‘நீலமணியை ஒக்கும் நிறமுடைய குரிசிலே! இங்ஙனமல்லாமல்
காமனையழித்தமையால் பெண்ணாசையை ஒழித்து முற்றும் உணர்ந்து
பேரின்பினனாகிய பெருமானுக்கு வேறு காரணமும் உண்டோ?
அத்திருவிளையாடலும் போகம் நுகர்ந்து ஆன்மாக்கள் பிழைக்குமாறு 
கொண்ட கருணைத்திறமே ஆகும். இவ்வாறுணராத கீழ்மக்கள் காமச்செயல்
என்று கூறுவர். அவர்தம் பேதைமையைப் போக்கி மெய்யுணரத்
தெருட்டுவோர் யாவர்? ஒருவரும் இலர்.