|      திருக்காஞ்சியை எய்தி வீராட்டகாசம் என்னும் திருத்தலத்திற்கு     எதிரில் அச்சிவபெருமானுடைய வீரச் சிரிப்புத்திரண்டுருக் கொண்டாற்
 போன்ற சக்கரதீர்த்தம் தொட்டு மூவுலகும் போற்றும் கங்கையினும் உயர்ந்த
 அத்தீர்த்தத்தில் மூழ்கி விரதம் பூண்டு பசிய நிறம் பூண்ட திருமால்
 வதிந்தனர். அவர் வதிந்த இடம் பச்சைவண்ணர் ஆலயமெனப் போற்றப்
 பெறும்.
      ஆங்கனம் வைகி நாள்தொறும் ஈரே ழாயிரம் அளிகெழு    பொகுட்டுத், தேங்கமழ் கமலங் கொண்டுவீ ராட்ட காசமா தேவனை
 அருச்சித், தோங்குபே ரன்பின் தொழுதெழுந் திரப்ப உலப்பருங்
 கருணைமீக் கூர்ந்து, மாங்குயில் பாகன் எதிரெழுந்த தருளி
 வழங்கினன் பவளம்நேர் வடிவம்,                          25
      அவ்விடத்தில் அவ்வாறிருந்து நாடோறும் பதினான்காயிரம் வண்டுகள்    மருவும் வித்துக்களைக் கொண்ட தேன் மணக்கும் தாமரை மலர்களைக்
 கொண்டு வீராட்டகாசப் பெருமானை வழிபாடு செய்து மிக்குயர்ந்த அன்பால்
 வணங்கி எழுந்து குறையிரப்பக் குயிலை ஒக்கும் சொல்லி பங்கனார் வற்றாத
 பெருங்கருணை மேலெழுந் தெதிரே தோன்றிப் பச்சைவண்ணராகிய
 திருமாலுக்குப் பவளத்தை ஒக்கும் நிறத்தினை வழங்கியருளினர்.
      பொரி அரைக் காயாம் போதுறழ் வண்ணங் கழீஇத்துகிர்    புரைநிறம் எய்திப், பெரிதுளம் மகிழ்ந்தான் ஆயிடைச் சிலநாள்
 வைகிமீண் டரவணைப் பெருமான், விரிதிரைத் தீம்பாற் கடலகத்
 தணுகி விரைமலர்க் கிழத்தியோ டிணங்கித், தெரியிழைத் திருவே
 காண்டிநீ பவளச் சேயொளி தழைக்கும்இவ் வடிவம்.           26
      பொரிந்த அடியினையுடைய காயாவின் பூப்போலும் நிறத்தினை     நீத்துப் பவளத்தை ஒக்கும் நிறத்தை எய்திப் பெரிதும் உள்ளம் மகிழ்ந்து
 அவ்விடத்தே சிலநாள் தங்கி அருச்சனை ஆதிய நிரப்பித் திருப்பாற்கடலை
 அடைந்த திருமால் ‘ஆராய்ந்த அணிகளையுடைய திருமகளே! பவளத்தை
 ஒத்துச் செவ்வொளி திளைக்கும் இவ்வடிவினைக் காணுதி’
      கச்சறப் பணைத்துப் புடைபரந் தெழுந்த கதிர்மணி முலையினாய்    இதுஎன், இச்சையாற் பெற்றேன் விழைந்தவா றென்மாட்டின்னலம்
 நுகரெனக் கேட்டுப், பச்சிளந் தோகை இந்நிறம் அடிகள் இச்சையாற்
 படைத்ததேல் மாய, விச்சையே போலும் நிலைமையன் றெனக்கீ
 தென்பயன் விளைத்திடும் என்றாள்.                       27
      ‘வார்கிழியப் பெருத்துப் பக்கங்களிற் பரவி எழுந்த நீலமணியை     ஒக்கும் கண்ணுடைய முலையினளே! இவ் வடிவினை என் ஆற்றலாற்
 படைத்துக்கொண்டேன். நீ விரும்பியபடி இனிய இன்பத்தை என்னி
 |