டத்து நுகர்க’ என்று கூறக் கேட்டு மிக்கிளைய மயில்போலுந் திருமகள் ‘அடிகேள்! இந்நிறம் நும் விருப்பத்தினாற் படைத்த தாயின் வஞ்சகச் சூழ்ச்சியான் ஆயதே ஆகும். நிலைபெற நிற்றல் இயலாதது ஒன்று. யாதோர் பயனையும் எனக்கு விளைக்காது இவ்வடிவம்’ என்று கூறினள். திருமகள் காஞ்சியை அடைதல் பாய்சிறைக் கலுழப் புள்ளர சுகைக்கும் பஃறலைச் சேக்கையன் வெகுளா, நீயினி இருந்தை வண்ணமா கென்னச் சபித்தலும் நேரிழை மேனிச், சேயொளி கருகக் கண்டுளம் பதைத்தாள் சிறியனேன் செய்பிழை பொறுத்திங், கேயும்இச் சாபம் தவிர்த்தருள் பொறையாள் கொண்கனே என்றடி பணிந்தாள். 28 பறக்கும் சிறகரையுடைய கருட அரசனை ஊர்தியாகச் செலுத்தும் பல தலைகளையுடைய பாம்பணையையுடைய திருமால் கோபங் கொண்டு ‘இனி’ நீ கரியின் நிறம் பெறுதி’ எனச் சாபங் கொடுத்த அளவிலே நேரிழையாள் திருமேனியின் நிறம் கரிதாகப் பார்த்து உள்ளம் வெருவி ‘அறிவினால் சிறியேன் செய்த பிழையைப் பொறுத்து மருவும் இச்சாபத்தினைப் போக்கி அருளசெய். பூமிதேவிக்குக் கணவனே!’ என வேண்டி அடியிணையிற் பணிந்தனள். தெம்முனை கடந்த திகிரியோன் இரங்கிச் சீற்றத்தால் விரைந்துனைச் சபித்தேன், அம்முறை யாற்றாற் கரிநிறம் பெற்றாய் ஆயினும் முன்னையின் விழைய, வெம்முலைப் போகம் எனக்குளதாக வெருவலை எனத்தழீஇக் கொள்ளச், செம்மலர்த் திருவும் அடியிணை இறைஞ்சித் திருந்துதன் இருக்கையுட் புக்காள். 29 பகைவரை வென்றடக்கிய சக்கரத்தையுடைய திருமால் கருணை காட்டி ‘வெகுளியால் விரைந்துனக்குச் சாபம் கொடுத்தேன், அந்நியதியால் கரிய நிறம் பெற்றனை. ஆனாலும் முன்போலவே விருப்புடைய புணர்ச்சி எனக்கு நின்னிடத்துண்டாவதாகுக அஞ்சாதே’ என்று கூறித் தழுவிக் கொள்ள, அவ்வளவே செந்தாமரை மலரில் உறையும் திருமாலும் துணை அடிகளை இறைஞ்சித் திருந்திய தன் இருக்கையாகிய அந்தப்புரத்துட் புக்கனள். புக்கபின் அங்கண் பாங்கியர் தம்மோ டுசாவினள் புதுநறாக் கான்று, நக்கபூஞ் சோலைக் காஞ்சிமா நகரை நண்ணிஆங் கிணைவிழி களிப்பத், திக்கெலாம் பரசத் திகழ்உல காணித் தீர்த்தநீர்த் தடங்கரை மாடே, மைக்குழல் உமையாள் இனிதமர்ந்தருளித் தவஞ்செயும் வரைப்பினைக் கண்டாள். 30 அங்குப் புகுந்து சேடியரோடு அளவளாவித் துணிந்து புதிய தேனைச் சிந்தி அவிழ்ந்த மலர்களைக் கொண்ட சோலை சூழ்ந்த காஞ்சிமா நகரை அடுத்து அவ்விடத்தில் இரு விழிகளும் கண்டு களிப்பவும், திசைகளி லெல்லாம் போற்றவும், விளங்குகின்ற உலகாணித் தீர்த்தப் |