510காஞ்சிப் புராணம்


     அன்றியும் காமக் கிறையவர் தனதர் அனையவர் கோடியர்த்
தரலால், என்றும்ஓர் இயல்பின் எங்கணும் விரவி எவற்றினுங்
கடந்தபே ரொளியைக், குன்றுறழ் கொம்மைக் குவிமுலைத் தடத்தாற்
குழைத்தருள் கருணைஎம் பிராட்டி, நன்றுவீற் றிருக்கும் பேரொளிப்
பிலத்திற் கப்பெயர் நாட்டலும் ஆமால்.                      34

     மேலும், செல்வத்திற்குத் தலைவராகிய குபேரர் ஒப்பவர் கோடியரைப்
படைத்தலாலும் எஞ்ஞான்றும் ஒரு தன்மையாய்த் திரிபின்றி எவ்விடத்தும்
கலந்து எவற்றினையும் கடந்து நின்ற பேரொளியை மலையை நிகர்க்கும்
வட்டமாகிய குவிந்த கொங்கைத் தடத்தாற் குழைத்துச் சுவடுபட அருளும்
கருணையை யுடைய எமது பெருமாட்டி நன்கு வீற்றிருக்கும் பேரொளிப்
பிலத்திற்கு அப்பெயரை நிறுத்துதலும் தக்கதாம்.

     இன்னும்இப் புவனப் பரப்பினிற் காமம் என்பன மனைவியர்
மக்கள், பொன்னணி இருக்கைப் பூண்முதல் பலவாம் பூந்தளிர்
அணிநலங் கவற்றுந், தன்னடி வணங்கி இரந்தவர் தமக்குத் தடங்கிரி
பயந்தபே ராட்டி, அன்னவை கோடி அளித்திட லானும்அப்பெயர்
எய்தும்அங் கதுவே.                                    35

     இனியும் இவ்வுலக வைப்பிடைக் காமம் எனப் பேசப் பெறுவன
மனைவியர், மக்கள், பொன்னணி மனைகள் பூண்கள் முதலிய பலவாகும்.
பொலிவுள்ள மாந்தளிரின் அழகிய நன்மையைத் தம் தன்மையால்: 
வருத்தும் திருவடிகளை வணங்கி வேண்டியவர் தமக்கு இமாசலன் ஈன்ற
பெருமாட்டியார் அவற்றைக் கோடியுற வழங்குதலாலும் அப்பெயரை
அப்பிலம் ஏற்கும்.

     அல்லதூஉங் கவைத்தாட் கரும்பகட் டூர்தி அடுதொழிற்
கூற்றினைக் குமைத்த, கொல்லைஏற் றண்ணல் நுதல்விழிச் செந்தீக்
கோட்படும் ஒருதனிக் கருப்பு, வில்லியை விளையாட் டியற்கையிற்
கோடி காமரா விழித்துணைக் கடையால், அல்லியங் கோதை
ஆங்களித் திடலால் அப்பெயர் பூண்டதும் ஆமால்.            36

     அதற்கு மேலும், பிளவுபட்ட குளம்பினையுடைய எருமைக் கடாவை
வாகனமாகவுடைய கொலைத் தொழிலைக் கொண்ட இயமனை வருத்திய
கொல்லேற்றினை மேற்கொள்ளும் பெருமானாரின் நெற்றிக் கண்ணில்
வெளிப்பட்ட செந்தீயால் கொலைப்படும் பெரிதும் ஒப்பற்ற கரும்பை
வில்லாகயுடைய மன்மதனை முயலாது வைத் தெளிதினில் கோடி மன்மதராக
இருவிழிகளின் கோடிகளால் அகவிதழ்கள் அமைந்த கோதையை அணிந்தவர்
படைத்தலாலும் காமகோடி எனும் அப்பெயர் பொருந்துவதாம்.