வீராட்டகாசப் படலம் 515


     ஒளி பொருந்திய வளையலை யணிந்த இருவரும் திருமாலின்
செய்கையை உணர்ந்து கொண்டனர். என்னையும் அடிமையாக உடைய
அம்மையார் திருடனை ஒத்து இவ்விடத்து மறைந்து நிற்பவன் யாவனோ?
என வினாவினர். திருமகளும் நாணி முதற்கண் அம்மையாரை வணங்கினள்.
அடுத்துத் திருமாலும் விரைந்து அம்பிகையின் அடியிணைகளிற் பணிந்து
மனமகிழ்ச்சியில் மூழ்கி ஒருபக்கமாக ஒடுங்கி நின்றனர்.

     நங்கை நாகணைக் குரிசிலை நோக்கி நன்று வந்தனை யோஎன
வினவி, அங்கண் முச்சகம் நீபுரந் தளிக்கும் ஆரு யிர்த்தொகை
இனிதுவாழ்ந் தனவே, பங்க யக்கணாய் என்றலும் கலுழப் பாகன்
நின்னருட் கருணைபெற் றுடையேம், எங்கள் வாழ்வினுக் கெவன்குறை
யானும் இவளும் உய்ந்தனம் எனத்தொழு துரைத்தான்.          50

     காமக்கண்ணியார் நாகவணையிற் பயிலும் மாலை நோக்கி நலமோ?
என வினாவி, மூவுலகினும் நீ பாதுகாக்கும் அரிய உயிர்த் தொகைகள்
நலமே வாழ்கின்றனவே? பதுமாக்கனே!  என்று வினாவுதலும் கருடப்
பாகனார் நின் திருவருளைப் பெற்றுடையேமாகிய எங்கள் வாழ்வினுக்குக்
குறையாதுளது? யானும், இவளும், பிழைத்தோம்’ என்று தொழுது கூறினர்.

     இறைவி பின்னரும் ஒன்றவற் கியம்பும் ஈண்டு முப்பதிற்
றிரண்டறம் வளர்க்கும், முறையின் என்அறச் சாலைஈ திங்கோர்
மூரிப் பாரிடம் இதற்கிடை யூறாய்க், குறைவில் ஆற்றலின் உழிதரும்
அதனைக் குறும்ப டக்குதி நீ என ஏவ நறைம லர்த்துழாய் மோலியும்
இறைஞ்சி நயந்து பஞ்சதீர்த் தத்தடங் கரைப்பால்.            51

     இறைவியார் மேலும் ஒன்றனை அத்திருமாலுக்கு அருள் செய்வர்;
இங்கு முப்பத்திரண்டறமும் வளர்க்கும் முறையினையுடைய என் அறச்
சாலைக்கு வலியமைந்த பூதமொன்று இடையூறு புரிய நிறைந்த
ஆற்றலுடையதாய்த் திரிதரும், அதன் கொடுமையை அடக்குதி நீ என்று
பணிக்கத் தேன் பொருந்திய துழாய் முடிப்பெருமானாரும், விரும்பி வணங்கி
பஞ்ச தீர்த்தம் என்னும் உலகாணித் தீர்த்தக்கரையில்,

திருமால் பூதத்தை அடக்கல்

     அன்று பாரிடம் பாரிடை வீழ்த்தி ஆற்ற லான்மிதித் ததன்மிசை
நின்றான், நின்ற வன்றனை உந்திமேல் எழும்ப நெரித்தி ருந்தனன்
இருந்தவன் றன்னை, வென்றி சால்விறற் பூதம்மேல் உந்த நீண்டு
மற்றதன் மிசைப்படக் கிடந்தான், கன்று பூதமும் வலிமுழு திழந்து
கமலக் கண்ணனை வணங்கிஒன் றிரக்கும்.                  52

     அன்றே பூதத்தைப் புவியிடை வீழ்த்தி வன்மையுடன் மிதித்து மேல்
நின்றனர். நின்றவரைத் தள்ளி அது மேலெழ இறுக்கி அதன்மேல் இருந்தனர்.
அந்நிலையினும் அவரை வெற்றி நிரம்பிய வலியுடைய பூதம் பிடித்துத்தள்ள
அப்பூதத்தின் மேற்படுத்தனர். வயிரங்கொண்ட அப்பூதம் முழுவலியையும்
இழந்து பதுமாக்கனை வணங்கி வரம்வேண்டும்