| 		| மற்ற தன்கரை மச்ச லிங்கம்என் றற்றம் இல்அரி அருச்சித் துள்ளது
 துற்ற பாதகச் சோம காசுரன்
 கற்கும் மாமறை கவர்ந்தொ ளித்தநாள்.           3
 |       அடுக்கிய பெரும்பாவச் செயல்களைப் புரிகின்ற சோமகாசுரன் கற்கவும்     அவற்றின் வழி நிற்கவும் வேண்டிய பெருமறைகளை வௌவிக் கொண்
 டொளித்த நாளில் குற்றமின்றித் தாங்கும் திருமால் அத்தீர்த்தக் கரையில்
 அருச்சித்த மச்சலிங்கம் விளங்கும் இயல்பினது.
 		| ஓத்தொ ழிந்தன உலகம் யாவையும் நீத்த வேள்விய நிலைமை குன்றலான்
 தீத்தெ றும்பசித் தேவர் மாயனைச்
 சோத்து நீசரண் எனத்து தித்தனர்.              4
 |       உலகோர் வேதம் ஓதுதல் தவிர்ந்தனர். வேதம் ஓதுவோர் இயல்பு    கெட்டமையால் வேள்விகள் நிகழ்ந்தில. தீயைப்போலச் சுடும் பசியால்
 வாடிய தேவர் திருமாலைச் ‘சோத்து நீ அடைக்கலம்’ எனத் துதி செய்தனர்.
      சோத்து - இழிந்தோர் செய்யும் அஞ்சலி (சத்ததானப்படலம்     1, வாணேசப்படலம் 76லும் காண்க) அவிபெறாமையால் தேவர் வருந்தினர்.
 		| அஞ்ச லீரென அருளி அச்சுதன் நெஞ்ச கத்துற நினைவின் நாடினான்
 எஞ்சு றாமறை யாவுங் கைக்கொடு
 வஞ்சன் ஆழியுள் மறைந்த வண்ணமே.          5
 |       ‘அஞ்சன்மின்’ என அருள் செய்து திருமால் நெஞ்சில் தோன்றும்     படி குறையாத மறைகளை முற்றவுங் கைப்படுத்து வஞ்சநெஞ்சினன் கடலுள்
 மறைந்த அந்நிலையை அறிவால் ஆராய்ந்து கண்டனர்.
 		| பிருகு மாமுனி சபித்த பெற்றியால் ஒருவ ருங்கயல் உருவு தாங்குபு
 மரும லர்ப்பொழிற் காஞ்சி வைப்பிடைப்
 பொருவில் இப்பிநீர்ப் புடையில் நண்ணினான்.   	6
 |       பிருகு மாமுனிவர் சாபம் தந்தமையால் விலக்கரிய மச்ச வடிவினைத்     தாங்கி மண மலர்களைக்கொண்ட சோலை சூழ் காஞ்சிமாநகர்க்கண்
 ஒப்பில்லாத இப்பி தீர்த்த மருங்கில் நெருங்கினார்.
  மேற்படி வேறு	 		| சலங்கொள் மீன்உருத் தன்பெயர் நாட்டிஅங் கிலிங்கம் அன்பின் இருத்தி அருச்சனை
 துலங்கச் செய்தருள் பெற்றுத் தொகுநிதிக்
 கலங்கள் மல்கு கடலகத் தெய்தினான்.            7
 |  |