| 		| புண்ணியப் பூம்புனல் ஆட்டிப் போர்விடை அண்ணலைத் தொழுதுல களந்த பேருருக்
 கண்ணுதல் மகிழ்வுறக் காட்டிப் பூந்துழாய்ப்
 பண்ணவன் ஆயிடைப் பணியின் மேயினான்.       9
 |       புண்ணியத் தீர்த்த நீரைக் கொண்டு திருமுழுக் காட்டிப் பொருதலை    யுடைய விடையூரும் அண்ணலை வணங்கி உலகங்களை அளந்த
 பெருவடிவினை நுதற்கண்ணுடைய பிரானார்க்கு மகிழ்ச்சிகூரக் காட்டித்
 திரிவிக்கிரம மூர்த்தியாய் அவ்விடத்தே திருத்தொண்டில் ஈடுபாடுடையர்
 ஆயினார்.
 அபிராமேச்சரப் படலம் முற்றிற்று.	     ஆகத் திருவிருத்தம்-1774		     கண்ணேசப் படலம்	 கலி விருத்தம்	 		| வாம னப்பெயர் மாணி தொழும்அபி ராம நாத வரைப்பு விளம்பினாம்
 நாம நீர்த்தடங் காஞ்சி நகர்வயின்
 ஏமம் மாண்டகண் ணேசம் இயம்புவாம்.           1
 |       வாமனன் என்னும் பிரமசாரி வணங்கிய அபிராம நாதேசம் கூறினோம்.     இனி, அச்சந்தரும் நீர்ப்பொய்கை கொண்ட காஞ்சிமா நகரில் இன்பம் மிக்க
 கண்ணேசத்தைக் கூறுவோம்.
 		| கடல்உ யிர்த்த கடுவிடந் தாக்கிமுன் உடலெ லாங்கரி வுற்று வெதும்பலால்
 படஅ ராவணைப் பண்ணவன் மாழ்கிஅவ்
 விடம்அ யின்ற விமலனைப் போற்றுவான்.         2
 |       திருப்பாற் கடல் உமிழ்ந்த கொடிய விடம் தாக்கித் திருமால் முன்னர்    மேனி முழுதும் கரிந்து வெப்ப முறுதலான் வருந்தி அவ்விடத்தை உண்டு
 உலகைக் காத்த அமலனைப் போற்றுவார்.
 		| கச்சி எய்தினன் கண்ணலிங் கத்தினை நச்சி அன்பின் நிறீஇநயந் தேத்தினான்
 பச்சை மென்கொடி பாகன் கருணைகூர்ந்
 திச்சை யாது விளம்புதி என்றலும்.               	3
 |  |