சென்னி ஐந்துடைய எந்தை பிரான்றன் திருவடிக்கண்விரை யாக்கலி வைப்பேன், பன்னு கிற்றிகடி தென்றலும் அன்னோன் பகவன் ஈன்றதனி மாமகன் நீயே, என்ன பல்கலையும் உன்னிடை வைகும் எம்பி ரான்அடியில் ஆணைத ரேல்யான், உன்ன ரும்பொருளின் உண்மை எனக்குத் தெரிந்த வண்ணம்உரை செய்குவல் என்று. 11 ஐந்து திருமுகமுடைய எம் தந்தையார் திருவடி மேல் ஆணை வைப்பேன். விரைந்து கூறுதி என்ற அளவிலே, பிரமன் பகவன் ஈன்ற தனிப்பெருமகன் நீயே. எத்தகைய பலகலையும் நின்னிடை ஒடுங்கும். எம்முடைய பெருமான் திருவடிமேல் ஆணையிடேல். யான் உணர்தற்கரிய பொருளின் மெய்ப்பொருளை எனக்குத் தெரிந்தபடி உரைசெய்வேன்’ என்று கூறி, அறுசீரடி யாசிரிய விருத்தம் பல்கலைக்கும் முதலாகப் புகன்றிடுவ தோம்என்னும் பதமாம் அந்தச், சொல்விளைக்கும் பொருள்அயன்மால் ஈசனெனும் மூவரெனச் சொல்வர் மேலோர், மல்குமறை உட்பொருளாய்ச் சுடரொளியாய் யோகுடையார் மனத்தே தோன்றும், அல்கிய சீர்ப் பிரணவத்தை உணர்ந்தவரே வீட்டின்பம் அடைய வல்லார். 12 ‘பன்மறைகளையும் ஓதத் தொடங்கும்போது முதற்கண் கூறப்படுவது ‘ஓம்’ என்னும் மொழியாகும். அம்மொழிக்குரிய பொருள்கள் மும் மூர்த்திகளென மொழிவர் மேலோர். மிக்க வேதத்தின் உள்ளுறைப் பொருளாயும், பேரொளியாயும் யோகியர்க்கு உள்ளத்திற் புலனாம் சிறப்புத் தங்கிய பிரணவத்தை அங்ஙனம் அறிய வல்லவரே பிறவி நோய் தவிர்ந்து வீட்டின்பத்தைப் பெறும் தக்கோர் ஆவர்.’ முன்னெழுத்தும் அதன்பொருளும் இவ்வளவே யான்அறிந்தேன் முதல்வா போற்றி, என்னைஇனி விடுத்தருளாய் எனலோடுங் கணங்கள்முகம் நோக்கி இன்னோன், புன்னிலையன் சிறிதேனும் உணர்ந்திலான் தருக்குமிகப் பூண்டான் கண்டீர், துன்னரிய சிறையின்கண் மற்றிவனைப் புகுத்தும்என வெகுண்டு சொல்லி. 13 ‘முதற்கண் கூறப்படும் பிரணவத்தின் பொருளை இந்த அளவே யான் அறிந்தேன். முதல்வனே! போற்றி எனக்கு இனிச் செலவு கொடுத்தருளும்’ என்ற அளவிலே, அறுமுகப் பிரானார் பணியாளரை முகம் நோக்கி ‘இப்பிரமன் அற்பன். சிறிதாயினும் உணர்ந்திலன். செருக்குமிகக் கொண்டுள்ளான் என்றுணர்திர். அனுபவித்தற்கரிய துன்பச் சிறையின்கண் இவனைப் புகச் செய்ம்மின்’ என்று சினந்து, கூறி |