54காஞ்சிப் புராணம்


     தேன் இயைறாது பெருக வண்டொலிக்கும் குளிர்ச்சி பொருந்திய
சோலை, துன்பம் மிகுந்து அழகு குன்ற மூடிய மேகங்களை விரையத் துள்ளி
எழுந்து பல்கால் உதைத்து அகற்றி நிறைந்த நீர் நிலையில் புரளுகின்ற
உரிமையுடைய நீண்ட இளவாளை மீன்களுக்குத் துறைகளிலெல்லாம் பின்செய்
உதவியெனப் பழங்களையும், தேனையும் அவ்விளமரச் செறிவு மிக்குச்
சொரிவன.

     குயின்-மேகம். கைம்மாறு-திருப்பிச்செயல். கை-செயல். மாறுதல்-எதிர்தல்.

     வண்டலாட் டயரும் வாள்மருள் நெடுங்கண் மங்கையர் நெரிசுரி
கூந்தற், கொண்டலைக் காணுந் தொறும்தொறும் அவர்தங்கோமளச்
சாயலுக் குடைந்து, தொண்டுபூண் டெதிர்நின் றாடுவதேய்ப்பத்
தோகைமா மயில்நடங் குயிற்றுந், தண்டளிர் துவன்றிப் புதுநறாத்
துளிக்குந் ததைமலர்ச் சாகையம் பொதும்பர்.                 8

     தண்ணிய தளிரும், செறிந்த மலரும் கொண்டு தேனைத் துளிக்கும்
கிளைகளையுடைய இளஞ் சோலையில் விளையாட்டைச் செய்யும் மகளிர்
கூந்தலாகிய மேகத்தைக் காணுந்தோறும் அம்மெல்லியலார் சாயலுக்குத்
தோற்று ஏவல் பூண்டு எதிர் நின்று ஆடுதலை ஒப்பக் கலாபத்தையுடைய
மயில் நடஞ்செய்யும்.

     மருள்-உவம வுருபு. துவன்றி-ததைந்து; செறிந்து.

     வாம்பெருந் திரைய தடம்புடை யுடுத்த வளம்பொழிற் சாகைகள்
தோறுந், தீம்புனல் குடையும் மாதரார் முன்னாள் செறித்த
பட்டாடைபொன் அணிகள், பூம்புன லகத்தில் தோன்றலும் இளையோர்
புனல்அர மகளிரென் றஞ்சிக், கூம்பிய கரத்தர் அந்நலார் நகைப்பக்
குலைமிசை நோக்கிவெள் குவரால்.                        9

     குளங்களின் மருங்கு சூழ்ந்த சோலையிற் கிளைகள் தொறும், மகளிர்
முன்னாள் சேர்த்த பட்டுடைகளும், அணிகலன்களும் அந்நீரில் தோன்ற,
நீரரமகளிர் என்றெண்ணி அஞ்சி இளைஞர் கரங்கூப்பி நிற்க, நீராட வந்த
மகளிர் கண்டு நகைப்பக் கரைமிசை நோக்கி நாணுவர்,

     கொங்கவிழ் பொதும்பர்க் கொழுமுகை யுடைந்து குளிர்மதுச்
சொரிதலின் ஆழ்ந்த, பங்கயச் சேக்கை மீமிசை எகினம் பைப்பய
மேல்நிவந் தெழுவ, பொங்குவெம் பாவக் கருமுருட் டமணால்
புணரியுள் சிலையுடன் அமிழ்ந்தும், எங்கள்வா கீசர்
அஞ்செழுத்தருளால் எழுந்துமேல் வயங்குதல் மானும்.          10

     நறுமணத்தொடும் மலர்கின்ற மலர்களைக் கொண்ட சோலையில்
செழுவிய அரும்பு முருக்கவிழ்ந்து தேனைச் சொரிதலினால் கீழுள்ள
குளத்தில் நீருள் அழுந்திய தாமரைப் பூவாகிய இருக்கைமேலிருந்த
அன்னம் மெல்ல மெல்ல மேல் ஏறி எழுதல், மிகக்கொடிய பாவச்செயலை