544காஞ்சிப் புராணம்


     செயிரறுந் தரள வெண்மணி நாலத் திருந்தெழில் படைத்தெதிர்
கண்டோர், உயிரினைப் பருகிக் குமிழெனத் திகழ்ந்த ஒள்ளொளி
நாசியின் வனப்பை, வெயில்விடு மணிப்பூண் காளையர் மனங்கள்
ஆடுபொன் ஊசலின் விளங்கி, மயிரெறி கருவி முதலெனக் கவின்று
மணிக்குழை வயங்கிரு செவியை.                            10

     குற்றம் நீங்கிய முத்தாகிய வெண்மணி தொங்கத் திருந்திய
அழகமைந்து கண்டவர் உயிரைக் கவர்ந்து குமிழம் பூப்போலத் திகழ்ந்த
மிக்கொளியுடைய மூக்கினது அழகையும், ஒளிவிடுகின்ற மணிகள் பதித்த
அணிகளைப் பூண்ட காளைப்பருவமுடையவர் மனங்கள் ஆடுகின்ற
பொன்னூஞ்சலினைப் போல விளங்கிக் கத்தரிக்கோலின் அடியைப் போல
அழகுற்று மணிகளிழைத்த குழைகள் விளங் கிருகாதுகளையும்,

     குயிலினஞ் சமழ்ப்பக் குழல்இசை பழகும் சின்மொழிக் குறுநகை
மொக்குள், கயிரவம் மலர்ந்த செய்யவாய் அமிழ்தம் ஊற்றெழுங்
கனிஇதழ் ஒளியைப், பயில்இருள் ஒதுக்கிப் பால்நிலாக் கான்று
படரொளி பரப்புவெண் மதியம், முயலறுத் தெழுந்தா லனையபே
ரழகின் முண்டக வாள்முக மலரை.                         11

     குயிலினம் நாணும்படி குழல் இசை கற்குமாறு மெல்லிய மொழியினையும்
புன்முறுவலையும் உடைய செவ்வல்லி அரும்பு மலர்ந்த செய்யவாய்
அமிழ்தமாகிய நீரூறும் கொவ்வைக் கனியை ஒக்கும் அதரங்களின்
ஒளியையும், தங்கிருளை ஒதுக்கி வெள்ளிய நிலவு வீசிவிரிந்த ஒளியைப்
பரப்பு வெண்டிங்கள் களங்கம் நீக்கி எழுந்தா லனைய பேரழகினையுடைய
ஒளிமுகமாகிய தாமரை மலரையும்,

     மடல்அவிழ் பாளைப் பசியபூங் கமுகோ வயிறுநொந் தலறிமுத்
துயிர்க்கும், குடவளைப் பொலிவோ எனமரு ளுறுப்பக் கவின் குடி
இருந்தகந் தரத்தைக், கடிகமழ் கொழுஞ்சா றொழுகமென் கரும்பைக்
கண்ணறத் தகர்த்திளம் பணையைத், தடவரைப் புகுத்தித் தொடையலை
வாட்டித் தகைஅமை அணிகெழுயுத்தை.                     12

     மடல் விரிகின்ற பாளைகளையுடைய பசிய அழகிய பாக்கு மரமோ
எனவும் வயிறு வருந்தி அரற்றி முத்துக்களை ஈனும் குடம் போலும்
சங்கினது பொலிவோ எனவும் வியப்பெய்த அழகு குடியிருந்த கழுத்தையும்,
மணங்கமழும் கொழுவிய சாறொழுக மெல்லிய கரும்பைக் கணுக்கள் கெடச்
சிதைத்தும், இளமூங்கிலை மலைமீது புகச்செய்தும், மலர் மாலையை வாடச்
செய்தும் இவ்வாறு பகைத்து வெல்லும் தகுதி அமைந்த அழகு கெழுமிய
புயத்தையும்,

     கண்ணோட்ட மற என்னும்பொருளும் பெற நின்றது,