மடிதிரைப் பரவை அமுதுறழ் இசைய மகரயாழ் புறங்கொடுத் திரியத், தொடிகளும் வயிரக் கடகமும் செறித்துத் தூநலம் படைத்தகூர்ப் பரத்தை, நொடிபயில் கிள்ளைப் பவளவாய் கடுக்கும் நுதியுடையக் கூருகிர் வனப்பின், படியறு விரல்வாய்ந் தொள்ளொளி துளும்பும் பனிமலர்க் காந்தளங் கரத்தை. 13 மறிதிரைக் கடலின் அமுதத்தை ஒத்த இசையினையுடைய மகரயாழ் தோற்றோடலால் தொடிகளையும் வயிரம்பதித்த கடகங்களையும் செறியத் தொட்டுத் தூய அழகுடைய முழங்கையையும், சொற்களைப் பயிலும் கிளிகளின் பவளமொக்கும் வாயை நிகர்க்கும் நுனியுடைய கூரிய நகங்களின் வனப்பினையுடைய ஒப்பில்லாத விரல்கள் வாய்ந்து மிக் கொளி ததும்பும் குளிர்ச்சி யமைந்த காந்தள் மலரைஒக்கும் கைகளையும், சுணங்குடை வனப்பும் ஆரமும் எழுதுந் தொய்யிலுஞ் சந்தனக் களியும், இணங்கிஅண் ணாந்து பாதிகாண் டகமேற் படாம்பொதி இளமுலைப் பொருப்பை, அணங்குறுத் திளையோர் மதியினைப் படுக்கும் படுகுழி யனையஉந் தியின்மேல், நுணங்குவண் டொழுக்கிற் கருமயிர் ஒழுகி நோக்கமை சிறுவயிற் றழகை. 14 அழகிய தேமலும், முத்துமாலையும், எழுதப் பெற்ற கோலமும், சந்தனச்சேறும் இயைந்து நிமிர்ந்து தோன்றியும் தோன்றாதும் பாதி காணுமாறு மேலே துகிலால் மறைக்கப்பட்ட இளைய கொங்கைகளாகிய மலைகளையும், துன்புறுத்திக் காளையர்தம் அறிவினை வீழ்விக்கும் படுகுழியை ஒத்த கொப்பூழையும், அதற்கு மேல் நுண்ணிய வண்டின் ஒழுங்குபோல அமைந்த கரியமயிர் ஒழுங்குபட்டுக் கிடந்து அழகமைந்த சிறிய வயிற்றின் அழகையும், கொடியென நுடங்கி வேளெனக் கரந்து குவிமுலைக் கிடைந்துசெந் தளிர்க்கைப், பிடியினுள், அடங்கித் துடியெனச் சுருங்கி மின்னெனப் பிற்குநுண் நுசுப்பைப், படிமையர் சீலக் குறும்பெலாம் அடக்கி நடுவுயர்ந் தகன்றெழில் படைத்து. வடிமலர்ப் பகழி வேந்தர சிருப்ப வயங்கிய அல்குலின் பரப்பை. 15 கொடியை ஒப்பத்துவண்டும், மன்மதனை யொப்ப வடிவு கரந்தும், குவிந்த கொங்கைகளைப் பொறாது பின்னிட்டும், செவ்விய தளிரை ஒக்கும் கைப்பிடியினுள் அடங்கியும், உடுக்கையொப்ப நடுவிடம் சுருங்கியும் மின்னலை ஒத்து விளங்குகின்ற நுண்ணிய இடையினையும், தவத்தினர்தம் ஒழுக்கமாகிய பகையை முற்றவும் அடக்கி அழகுற்று மன்மதன் அரசு வாழ விளங்கிய அல்குற் பரப்பையும், 69 |