| 		| பல்கரி வீரர்தேர் பரிகள் தம்முடன் நல்கிய தலைமைபெற் றனைய சாத்தனும்
 ஒல்கிடை மலைமகள் உவகை மீக்கொள
 மல்குசீர்ப் பிலத்தயல் மகிழ்ந்து வைகினான்.      32
 |       நால்வகைப் படைகளுடனும் அருளிய தலைமையைப் பெற்றுச்     சாத்தனார் துவளும் இடையையுடைய காமாட்சி அம்மையார்க்கு மகிழ்ச்சி
 பொங்கும்படி சிறப்பு மிகுகின்ற பிலத்தின் பக்கத்தே மகிழ்ந்து தங்கினர்.
 		| கடாம்நிரை ஏழுயர் கரிகள் மேல்கொடு நடாய்உளங் களித்திறு மாந்து நாள்தொறும்
 வடாதுபாற் செண்டணை வெளியின் மாறடும்
 அடாவலி படைத்தவன் ஆடல் பேணுமால்.       33
 |       மதம் நிறைந்து ஏழுறுப்புக்கள் உயர்ந்த களிற்றினை ஊர்ந்து உள்ளம்    களித்துச் செருக்கி நாடோறும் வடக்கி லமைந்த செண்டணை வெளியின்கண்
 பகைவரை அழிக்கும் பிறரால் அழித்தற்கரிய வலியினையுடைய ஐயனார்
 உலாவருவர்.
      ஏழுறுப்பு உயர்வு: கை, கால், வால், கோசம்.	 		| வலம்படர் சிறப்பின்மா சாத்தன் ஏத்திய நலம்படர் கருணைமா சாத்த நாதனைப்
 புலம்படர் சிந்தையாற் போற்றப் பெற்றவர்
 இலம்படார் இருமையும் இன்பம் எய்துவார்.       34
 |       வெற்றி மிகுந்த சிறப்பினையுடைய மாசாத்தனார் போற்றிய நன்மை    மிகுந்த அருளைச் செய்யும் மாசாத்த நாயகரை மெய்யறிவாற் போற்றப்
 பெற்றவர், வறுமையையும், எய்தார்; மேலும், இம்மை மறுமைகளில் இன்பமும்
 பெறுவர்.
 மங்களேச்சரம்	 எழுசீரடி யாசிரிய விருத்தம்	      மற்றதன் வடபால் மலைமகள் இகுளை மங்களை மண்டபம்     இழைத்து, வெற்றிமண் டபத்தின் பிறங்குற மங்க ளேசனை விதியுளி
 நிறுவி, அற்றமில் சிறப்பின் மங்கள தீர்த்தம் அகழ்ந்துநீ ராட்டுபு
 தொழுதாள், பற்றுமங் களநாள் அத்தடம் படிந்து பணிபவர்
 இருமையும் பெறுவார்.                                                	35
      மகாசாத்தேசத்திற்கு வடக்கில் உமா தேவியாரது தோழி மங்களை     என்பவர் மண்டபம் ஒன்று சிருட்டித்து அதன்கண் விளங்குற மங்கள
 நாயகனை விதிப்படி நிறுவிப் போற்றிக் குற்றமற்ற சிறப்பினை
 |