மாகித் தளிர், பூ, கனி முதலியவாகக் கூடிநிற்கும் இவை செறிய, அழித்தற்குக் காரணமாய வலிமை மிக்க திருக்கச்சி மயானத்தின் மேற்குத் திசையில் விளங்குக என் றாணையிட்டனர். அனைத்தினுக்கும் முன்னுள்ள பரநாதம் பழமை யாயிற்று. மேற்படி வேறு தாவ ரும்பழ மாமறை தம்பிரான் அருளான் மேவ ருந்தனிச் சூதமாய் மயானத்தின் மேல்பாற் பூவ ரும்பிமென் தளிர்கனி புதுமலர் துறுமி ஓவ ருங்குளிர் நிழல்குலாய் ஓங்கிய தன்றே. 4 | கெடுதல் இல்லாத பழம் பெருமறை, உயிர்களின் தலைவராகிய பெருமானார் திருவருளாகிய ஆணையால் ஒப்பரிய ஒற்றை மாமரமாய் மெல்லியதளிர், அரும்பு, புதிய மலர், பழங்களாகிய இவை செறிந்து ஒழிவின்றிப் பரந்து குளிர்ந்த நிழல்திகழ்ந்து ஓங்கியது. கொன்றை மாலிகைச் சடைமுடிக் குழகன் அங் கதன்கீழ்த் துன்றும் ஆனந்தப் பேரொளி இலிங்கமாத் தோன்றி வென்ற நல்லெழில் விரிந்ததன் மெய்இடப் புறத்து மன்றல் வார்குழல் இலளிதை மாதினை உயிர்த்தான். 5 | கொன்றை மலர் மாலையையும் சடைமுடியையும் உடைய மூவாத இளையோன், அம்மாமரத்தின் அடியில் செறியும் பேரின்பப் பெருஞ்சுடர் கொண்ட சிவலிங்கத் திருமேனி கொண்டு நின்று காலத்தை வென்ற நல்ல அழகு பரந்த தன்வடிவின் இடப்புறத்தில் மணங்கமழும் நீண்ட கூந்தலை யுடைய இலளிதை என்னும் பெருமாட்டியைத் தோற்று வித்தனன். வணங்கு நுண்ணிடைக் கிடர்செய மதர்த்துமே லெழுந்த இணங்கு பூண்முலை இலளிதைப் பிராட்டியும் எழுந்தங் கணங்கு வெம்பவக் கடலின்நின் றருட்கரை விடுக்கும் நிணங்கொள் சூற்படை நெடுந்தகை திருவடி இறைஞ்சி. 6 | வளைகின்ற நுண்ணிய இடைக்குத் துன்பம் உண்டாக இறுமாந்து மேல் நிவந்து ஒன்றொடொன் றிணங்கிய அணி பூண்ட கொங்கையையுடைய இலளிதைப் பெருமாட்டியும் அப்பொழுது எழுந்து சூலப்படை ஏந்திய பெருந்தகையினுடைய, உயிர்களைக் கொடிய பிறவிக் கடலினின்றும் அருளாகிய கரையிற் சேர்க்கும் திருவடிகளை வணங்கி. விளங்கும் ஏகம்பம் மேவிய விமலவிண் ணவர்கள் துளங்க ஆர்கலி முகட்டுவந் தெழுஞ்சுடு விடத்தைக் களங்கு லாவஉண் டமைந்தருள் களைகணே எனக்கு வளங்கு லாவிய அருட்பணி வகுத்தருள் எனலும். 7 | |