570காஞ்சிப் புராணம்


ஒன்ன லார்குடர் குழம்பியுள் வெதும்ப, வென்ற கூர்ம்படைத்
தாணுமா லயனா விளம்பு மூவரும் விரைத்தபூந் தொடையல், கொன்றை
வார்சடை முதல்வனார் கமலக் கொழும லர்ப்பதந் தொழுதுபோற்
றிசைத்து.                                              32

     என்று மாவடியில் முளைத்தருளும் சிவலிங்க மேன்மையை உயர்த்துக்
கூறியருளப் பொருந்தும் பேரின்பப் பெருங் கடலில் திளைத்துப் பகைவர்
நடுங்க வென்ற கூரிய மழுப்படையையுடைய உருத்திரரும், திருமாலும்,
பிரமனும் ஆகிய மும்மூர்த்திகளும் மணமுடைய கொன்றை மலர்மாலையைச்
சூடிய முதல்வர் தம் திருவடிகளைத் தொழுது துதித்து.

     காட்டின் நாடகங் குயின்றருள் இறைவ கம்ப மேவிய கருணையங்
கடலே, மோட்டு நீர்ப்புவி வியத்தகும் இனைய  முதுநகர்ப்பெருந்
தன்மையுந் தனிமா, ஈட்டு மேன்மையும் எமக்குரைத்தருளாய் என்று
வேண்டலும் ஈர்ந்துணர் இதழித், தோட்டு மாலிகைச் சடைமுடிக்
குழகன் தொன்ன கர்த்திறங் கேண்மின் என்றியம்பும்.          33

     ‘பெருமயானத்தில் நடித்தருளும் பெருமானே! கருணை வெள்ளமே
கடல்சூழும் உலகில் அற்புதத் தலமாகிய காஞ்சியின் பெருமையையும்,
மாந்தருவின் மாட்சிமையையும் உரைத்தருளுக என வேண்டலும்
கொன்றைமலர் மாலையர் காஞ்சியின் சிறப்பினை அருள் செய்வர்.

காஞ்சித் திருநகர் மாட்சி

     கறங்கு வண்டிமிர் கமலமுந் துழாயுங் கடுக்கை மாலையுந்
துயல்வரு புயத்தீர், பிறங்கு கவ்வெனும் மொழிப்பொருள் பிரமம்
பிரம மானயாம் அஞ்சிக்கப் படலால், உறங்கி டாப்புகழ்க் காஞ்சி
என் றுரைக்கும் ஒருதி ருப்பெயர் எய்தும்இந் நகரம், அறங்க
ரைந்தநூல் எமைப்பரம் பிரமம் அகில காரணம் என்பது தெளிவீர்.  34

     ‘வண்டுகள் இமிரும் தாமரையும், துளவமும், கொன்றையும் ஆகிய
இவற்றின் மாலைகள் தவழ்கின்ற தோள்களையுடைய மூவிர்! ‘க’ என்னும்
மொழிப் பொருள் பிரமம் என்பதாம். பிரமமாகியயாம் வழிபடப்
பெறுதலினால் இவ்விடம் காஞ்சி எனப் பெயர் பெறும். அறங்களை
உணர்த்தும் மறைகள் எம்மைப் பரப்பிரமம் எனவும், அகிலத்திற்குக்
காரணன் எனவும் உணர்த்துதலைத் தெளிமின். காரணன் நிமித்தகாரணன்
என்க. க-அஞ்சி பிரமம் அஞ்சிக்கப்பட்ட இடம்.

     இலகு வாணகை அரிமதர் மழைக்கண் இருண்ட வார்குழல்
வேய்மருள் பணைத்தோள், கலப மாமயில் இயல்எழில் மடவார்
உந்தித் தானத்தைக் காஞ்சிஎன் றுரைப்ப, சுலவு வெண்டிரைப்
பனிக்கடல் உடுக்கைத் தொல்லை நானில மடக்கொடி தனக்குக்,
குலவு காஞ்சிநற் றானமாய்ப் பொலிந்த கொள்கை யானும்அத்
திருப்பெயர் வழங்கும்.                                     35