| பெறும் அயோத்தியும், பிரம லோகமும், பேரொளியையுடைய தேவபுரமும்    புவியிடை மேம்பட்ட காஞ்சியே அல்லாமல் மூவுலகினும் வேறில்லை
 என்றறிதிர்’
      மற்றிடங்கள் உபசாரத்தானும், இக்காஞ்சி உண்மையானும் பொருந்தும்     என்க.
      இத்தி ருப்பெருங் காஞ்சியின் எம்மை மறலிக் கஞ்சுநர்     இகபரம் விழைந்தோர், நித்தம் அன்பொடு வழிபடூஉப் பழிச்ச
 நிறைந்த பேரருட் கருணைபூத் துறைகேம், மெய்த்த மாமறை முழுது
 மிவ்வாறு விளம்பும் ஆதலின் மற்றெமக் கினிய, உத்த மப்பதி
 இதுஎனத் தெளிமின் ஓங்கு மாந்தருப் பெருமையும் உரைப்பாம்.
      ‘இயம பயத்திற்கு அஞ்சுவோரும், இம்மை மறுமை இன்பங்களை    விரும்புவோரும் நாடோறும் வழிபட்டுத் துதி செய்ய நிரம்பிய பெருங்கருணை
 மிகத் தழைத்து அருள் செய்ய இந்நகரில் விளங்கி வீற்றிருக்கின்றோம்.
 மெய்ந் நூல்கள் முழுவதும் இவ்வாறே கூறும். எமக்கினிதாகிய உத்தமத்
 தலம் இதுவே எனத் தெளிமின். உயர்ந்த மாந்தருவினது பெருமையையும்
 இனி உணர்த்துவோம்,
 மாந்தருவின் மாட்சி	      மீது மன்னிய மூலமுங் கிழக்கு நோக்கு சாகையு மாய்விரை     கமழும், பாத வந்தனை உணர்ந்தவன் வீடு பற்றும் ஆங்கது பலகனி
 படைத்துச், சீத வார்புனல் ஒழுக்கறாக் கம்பைத் திருந திக்கரை
 மருங்கொலி வேதச், சூதமாமர மெனத்திகழ்ந் தொளிருந்தொல்லை
 வையகம்  பெரும்பயன் படைப்ப.                           40
      ‘மேலே பொருந்திய வேரும் கீழே நோக்கிய கிளைகளுமாம்     மணங்கமழும் மரத்தினை உணர்ந்தவன் வீட்டினைத் தலைப்படுவன்.
 அம்மரம் பல பழங்களைத் தோற்றுவித்துக் குளிர்ந்த நீர் இடையறாது
 பெருகும் கம்பா நதிக் கரையில் வேத மாமரமாகிப் பழைய பேருலகம்
 உறுதிப் பயன்களை அடையுமாறு விளங்கும்.
      ஏழி ரட்டிய கல்வியும் அதன்மேல் மல்லி கைக்கொடி     எனப்படர்ந் தமரும், பாழி விச்சைகட் கிறைவியாங் காமக்
 கண்ணி அத்தரு பசுங்கொடிக் கினியாள், ஊழி ஈற்றினும், உலப்பருந்
 தகைசான் றோங்கு மாவினுக் குரிமையம் யாமே, ஆழி ஏந்திய
 நாரணன் விரிஞ்சன் அரன்எ னப்படும் அன்புடைப் புதல்வீர்.     41
      வேதம் நான்கும் ஒழிந்த பதினான்கு வித்தைகளும் மல்லிகைக்    கொடியாய் அம்மரத்திற் படர்ந்து தழைத்து நிலைபெறும். பெருமையும்
 வலிமையும் உடைய பதினான்கு வித்தைகளாகிய பசிய கொடிக்குக்
 காமாட்சியம்மையே தலைவி ஆவர். ஊழியினும் அழிவின்றி ஓங்கும்
 அம்மாமரத்தினுக்கு யாமே தலைவர் ஆவோம்’ பிரமன், மால், உருத்திரன்
 எனம் பெறும் அன்புடைய புதல்வீர்காள்!
 |