திருவேகம்பப் படலம் 577


     யுகமுடிவில் திருக்கூத்தியற்றும் இடமாகும் அழகினால் ‘இலயசித்து
எனவும், இடையூறகற்றிச் சகலசித்திகளையும் வழங்குதலால் ‘சகலசித்திபுரம்’
எனவும் இயல்பாகிய மெய்த்தவம் புரிந்து உமையம்மையார் போற்றும்
பரம்பிரமமயமாகும் திருநகர் ‘தபோமயம்’ எனவும் கூறப்படும்.

வேதன் எமக்குத் தகுஞ்சோம வேள்வி செயலாற் பிரமபுரம்
ஆதி பீடம் முதற்பீட மாய சிறப்பால் கன்னிஎனுங்
காதல் அணங்கு புரந்திடலாற் கன்னி காப்பிங் கெமைக்கண்டோர்
பேத மின்றிச் சிவன் உண்மை பெறலாலாகுஞ் சிவபுரமே.      58

     பிரமன் சோமயாகம் செய்தமையால் ‘பிரமபுரம்’ எனவும் சத்திபீடங்களில்
முதலிடம் பெறுதலின் ‘ஆதிபீடம்’ எனவும், கன்னியாகிய உமையம்மையார்
முப்பத்திரண்டறம் புரிந்து காத்தலால் ‘கன்னி காப்பு’ எனவும், எம்மைத்
தரிசித்தோர் சிவப்பே றெய்தலால் ‘சிவபுரம்’ எனவும் பேசப்பெறும்.

மேற்படி வேறு

     எடுத்தி யம்பும்இப் பன்னிரு நாமமும் வைகறை எழுந்தோதில்,
அடுத்த தீக்கனாக் காட்டிய இடும்பைநோய் வறுமைதீர்ந் தருள்வாரி,
மடுத்து வான்கதி எய்துமா றுமக்கிவை வகுத்தனம் அருளால்என்,
றுடுத்த திக்குடை நாயகன் விளம்பலும் உவகையங் கடலாழ்ந்து    59

     திகம்பரராகிய பெருமானார் உயர்த்திப் பேசப்படும் இப்பன்னிரு
திருப்பெயர்களையும் வைகறையிற் கணிப்போர்க்குத் தீக்கனாவால்
வருந்துன்பமும், வறுமையும் பிறவும் நீங்கி அருட்கடலில் திளைக்குமாறு
உங்களுக்கு வகுத்துக் கூறினோம் என அருளிய அளவில் மகிழ்ச்சிக்
கடலில் மூழ்கி.

இறைவன் மும்மூர்த்திகட்குப் பணித்தல்

     உலம்ப டைத்ததோள் பண்டனாம் அவுணனால் ஒளிஇழிந்
துலந்தேமை, நலம்ப டைத்தவான் சோதியுள் ஒடுக்கிமீட் டிறைவிதன்
நடுவாமம், வலம்ப டைத்தமூ விழியினும் வருவித்த வள்ளலே
அடியேங்கள், புலம்ப டைத்தினிச் செய்பணி அருளெனப் போற்றினர்
முதல்மூவர்.                                            60

     முதற்றேவர் மூவரும் கல்லொக்கும் தோள்களையுடைய பண்டா
சுரனால் ஒளியை இழந்து வற்றினோமை மங்கலச்சுடருள் ஒடுக்கி மீட்டும்
உமையம்மையாரின் நுதல், இடம், வலம் கொண்ட முக்கண்ணினும் வருவித்த
வள்ளலே! அடியரேம் அறிவு பெற்றினிச் செய்தொழில் அருள்க எனப்
போற்றினர்.

     ஓதும் அவ்வுரை திருச்செவி சாத்திஎம் உளங்களி வரச்செய்யுங்,
காதல் மைந்தர்நீர் ஆதலின் நுமக்கருள் காட்டுதும்.