திருவேகம்பப் படலம் 581


     அறம்பாவம் என்றிரண்டின் எம்முண்மைத் தன்மையினும் அகில
லோகந், திறம்பாமற் பிரமாண மாவீர்வித் தெனும்பகுதி ஞானஞ்
செப்பும், புறம்பாயா மனப்பெரியோர் நும்மொழியான் எமைஉணரும்
பொலிவான் வெள்ளிப், பறம்பாறாம் எமக்கினிய பான்மையீர்
வேதமெனப் பெயர்பெற் றீரால்.                           74

     புண்ணிய பாவங்களுக்கும் எமது குறிக்கோளுக்கும் உலகம் பிறழாத
அளவுகோலாக விளங்குவீர். ‘வித்’ என்னும் பகுதிக்குப் பொருள் ஞானம்
ஆகும். மனத்தை அடக்கிய பெரியோர் நும் ஆணைவழி ஒழுகி எம்மை
அறியும் பொலிவினாலே கைலை மலையை அடைதற்குரிய ஏதுவால்
எமக்கினிய இயல்பினீர்!  நீவிர் வேதம் எனும் பெயரைப் பெற்றீர்.

வேதியர்கள் முதல்மூவர் உமைஓதி வீடுபே றடைக முற்றும்
ஓதுமறை இரண்டானும் ஒன்றானும் ஓதாது புறநூல் கற்கும்
ஏதில் இரு பிறப்பாளர் இருட்குழிவீழ்ந் திடர்ப்படுவா ராகநீயிர்
பேதியா மெய்யன்பின் எமைஈண்டு வழிபாடு பேணி வாழ்மின்.  75

     முதல் மூன்று வருணத்தோர் நும்மை ஓதி முத்தி எய்துக. ஓதுதற்குரிய
வேதத்தை ஒன்றோ பலவோ ஓதாமல் புறச்சமய நூல்களைக் கற்கும்
இருபிறப்பினோர் நரகக் குழியில் விழுந் தழுந்துக. நீயிர் ஒன்று பட்ட
உண்மை அன்பினால் இவ்விடத்தில் எம்மைப் பூசனை புரிமின்.

     உலகுய்தற் பொருட்டுநாம் எவ்விடத்தின் எவ்வுருவம்
எடுப்போம் அங்கண், நலம்எய்தும் அதற்கியைந்த வடிவம்நீர்
கொள்கென்று நயப்ப முன்னாள், அலர்தலைமா நிலம்பரசும்
இந்நகரின்வரம் அளித்தேம் அடையார் உட்கும், வலமன்னுந்
திரள்திண்தோள் மைந்தர்காள் ஆதலின் அம் மறைக ளெல்லாம்.  76

     உலகம் வாழ்வுபெற எங்கு எவ்வடிவத்தை யாம் கொண்டாலும்
அதற்குப் பொருந்திய வடிவை நீவிர் கொண்மின் என் றுலகெலாம்
போற்றும் இந்நகர்க்கண் வரம் அளித்தோம். பகைவர் அஞ்சுதற்குக்
காரணமாய வெற்றி நிலைபெறும், திரண்ட திண்ணிய தோள்களையுடைய
மைந்தர்களே! அதனால், அவ்வேதங்கள் யாவும்,

     ஈங்குநாம் பரஞ்சோதி இலிங்கவடி வாய்அமர்ந்தே மாக
ஈண்டைத், தேங்கவிழ்க்குங் கவிழ்இணர்ப்பூங் கனிதுவன்றும்
ஒருமாவாய் திகழ்ந்து நின்ற, வீங்குதிறற் புரம்மூன்றும் இறுத்த நாள்
போர்க்கோலம் மேயி னேம்யாம், ஆங்கவையுங் கொய்யுளை வெங்
கலினவாம் பரிவடிவாய் அமைந்த காண்மின்.                   77

     யாம் இங்குப் பேரொளிச் சிவலிங்க வடிவில் வீற்றிருக்க
அவ்வேதங்கள் இங்கே தேனைப்பொழியும் மலர்க் கொத்துக்களும்
பழங்களும் பொதுளும் ஒற்றை மாமரமாய் நின்றன. பெருவலியுடைய
முப்புரங்