களைக் கெடுத்த நாளில் யாம் போருக்குரிய கோலம் கொண்டவழி அவை பிடரி மயிரினையும் கடிவாளத்தையும் உடைய தாவும் குதிரைகளாயின அவற்றை எண்ணுமின். மற்றைவே டுருவாதி வடிவம்நாங் கொண்டுழிமா மறையும் ஆங்கண், பற்றமைகூ ருகிர்ஞாளி முதலியவாய்ப் போந்தனஇப் பதியுள் ஓர்பால், வெற்றிநடம் புரிகாலை நூபுரமாய்ப் பொலிந்தனஅவ் விரிநீர்ச் சூழல், அற்றைநாள் முதல்வேத நூபுரப்பேர் பெற்றுவினை அறுக்கு மாலோ. 78 வேட்டுவ வடிவம் முதலிய கொண்ட காலை வேதங்கள் வேட்டைக் கண் பற்றுதற்குரிய நகங்களையுடைய நாய் முதலியவாகப் பின் தொடர்ந்தன. இந்நகர்க்கண் வெற்றி வாய்ந்த திருக் கூத்தியற்றத் திருவடிகளில் சிலம்புகளாயின. அவ்விடமும் வேதநூபுரம் எனப் பெயரேற்றுத் தொழுவாரது தீவினையை அறுக்க ஏதுவாயிற்று. மாண்டபெரு வளம்படைத்த தாருகா வனத்திடைநாம் பயிக்க வேடம், பூண்டவழிக் கோவணமாய்ப் பொலிந்தனவால் இவ்வாறு புரைதீர் நம்பால், வேண்டும்வரம் பெற்றோங்கும் வேத நூல் உணராதார் எம்மைத் தேறார், ஆண்டகைமை வேதியர்க்கு மேம்பாடு வேதமே யாகும் அன்றே. 79 மிகப்பெருஞ் செல்வமைந்த தாருகாவனத்து முனிவர் மனைவியர் உள்ளவழிப் பிட்சாடன கோலத்தோடும் செல்லக் கோவணம் ஆயின. நம்மிடத்துக் குறை தீர வேண்டும் வரம் பெற்று உயரும் வேத நூல்களைத் தெளியாதார் எம்மைத் தெளியார். ஆளுந் தகுதியுடைய வேதியர்க்குச் சிறப்பளிப்பது வேதமே யாகும். இத்தகைய மாமறைநூல் முந்நாள் இத் திருக்காஞ்சி வரைப்பில் தென்சார், தத்துநீர் அலைபுரட்டுஞ் சேயாற்றின் தடங்கரைக்கண் இமையோர் கட்கும், மெய்த்தவர்க்கும் ஓதுவித்தோம் ஆதலினான் மேவுதிரு ஓத்தூர் என்னும், அத்தலத்தின் எமைத்தொழுதோர் அருமறைநூல் முழுதுணர்ந்து வீடு சேர்வார். 80 இக்காஞ்சிக்குத் தென்திசைக்கண் அமைந்த சேயாற்றங் கரையில் முனிவரர்க்கும் தேவர்க்கும் வேதத்தை ஓதுவித்தோம். ஓத்துரைத்தமையால் அவ்விருக்கை திருவோத்தூர் எனப்பெறும். ஆங்கெம்மை வழிபடுவோர் வேதப்பொருளை முற்றவும் உணர்ந்து வீட்டினைத் தலைப்படுவர். இன்னமறை விதியால்இவ் வேகம்பத் தெமைப்பூசை இயற்றீர் என்னப், பன்னகப்பூண் அணிமார்பிற் பரமேட்டி பணித்தமொழி பேணி அன்னோர், சென்னிமிசைக் கரங்கூப்பி ஆனந்தப் பெருங்கடலில் திளைத்து வாழ்ந்து, பொன்னிமயப் பிடிமணந்த மணவாள நம்பிகழல் பூசிப் பாரால். 81 |