| யால் யாதும் ஆற்றுவல் செய்பணி அருளாய், மாண்டமுப்புரம்    பொடித்தவர் தமையும் வெல்ல வல்லுநன் மற்றுரை யெவனோ.   	17
      பின்பு இந்திரன் மன்மதனை எண்ணினன். அப்போதே இரதியும்     வசந்தனும் உடன் வர எதிர்தோன்றி வணங்கி நின் ஆணையின்
 வன்மையால் எதனையும் செய்ய வல்லேன். செயத் தக்க பணியில் என்னை
 ஏவுதி. முப்புரம் எரித்த சிவபிரானையும் அழிக்க வல்லேன் எனின்
 வேறென்னை பேச்சுளது? என்றனன்.
      ஈதி யம்புழி இந்திரன் உவகை எய்தி விண்ணவர் இடும்பையும்    அவுணன், நீதி யில்லன புரிவதும் மலரோன் நிகழ்த்தும் மாற்றமும்
 வகுத்துரை செய்து, பேதி யாவகை பெருந்தகை இன்னே பிஞ்ஞ
 கன்றனை உமையொடுஞ் சேர்த்திப், போதி என்றலும் ஐங்கணைக்
 கிழவன் பொன்ந கர்க்கிறை விடைகொடு மீண்டான்.            18
      இந்திரன் தேவர் துன்பத்தையும், தாருகன் கொடுமையையும், பிரமன்    கருத்தையும் உணர்த்திப் ‘‘பெருந்தகையே! உறுதி பூண்டெய்திப் பெருமானை
 உமையம்மைபால் மணத்தாற் சேர்த்திப் போதுதி” என்ன மன்மதன்
 இந்திரனிடத்து விடை பெற்றுப்போனான்.
 இறைவன் இறைவியை மணத்தல்	      மீண்டு செம்மலார் இருந்துழி அணுகி மெல்ல வெஞ்சிலை    வாங்கலும் அவனை, மாண்ட குந்திரு நுதல்விழி நெருப்பின் மடுத்து
 வார்குழல் இரதிநின் றிரப்பக், காண்ட காவகை உருவிலி யாக்கிக்
 கடுந்த வம்புரி மலைமகள் மணந்து, தூண்டு வேற்படைக் குரிசிலை
 உதவித் தாரு கன்றனைத் தொலைத்தருள் செய்தார்.            19
      அம்மையைப் போக்கிய இறைவனார் யோகிருக்கையில் மன்மதன்     கருப்பு வில்லை வளைக்கையில் நுதல் விழியால் அவனை எரித்து இரதியின்
 வேண்டுகோளுக்கிரங்கி அவள் கணவனை உயிர்ப்பித்து அவளுக்கு மட்டும்
 தோன்றும் வடிவில் நிறுத்தி மலைமகளை மணந்து பெருமானார் முருக
 வேளைத் தந்து அப்பெருமானைக் கொண்டு தாருகனைத் தொலைத்தனர்.
 அறுசீரடி ஆசிரிய விருத்தம்	 		| ஆங்கதன் பின்னர்ச் செங்கேழ் அலங்கொளி வடிவின் நஞ்சந் தூங்கிய மிடற்றி னாருஞ் சுரிகுழல் இமய மாதும்
 ஓங்குயர் பலவுஞ் சந்தும் வேரொடும் ஒடியத் தள்ளி
 வீங்கொலி அருவி தாழும் மந்தர வெற்பின் மேலால்     20
 |       பிறகு விட் டிலங்கும் நஞ்சினையுடைய பெருமானாரும் இமய    வல்லியும் சந்தன மரம் பலா மரம் முதலிய முறியுமாறு அருவி வீழும்
 மந்தர மலையின் மேல்,
 |