6காஞ்சிப் புராணம்


எப்பொழுதும் சாத்தும் செவ்வாயும், காண இனியதும், கவினைத் தருவதுமாகிய
சிவவேடப் பொலிவான் அமைந்த அழகும் ஆகிய இவற்றைத் துதித்து
வாழ்வாம்.

சுந்தரமூர்த்தி நாயனார்

     ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட் டாட்கொண்ட
உவனைக் கொண்டே, இருமணத்தைக் கொண்டருளிப் பணிகொண்ட
வல்லாளன் எல்லாம் உய்யப், பெருமணச்சீர்த் திருத்தொண்டத்
தொகைவிரித்த பேரருளின் பெருமாள் என்றுந், திருமணக்கோ
லப்பெருமாள் மறைப்பெருமாள் எமதுகுல தெய்வ மாமால்.        14

     ஒருமணத்தைத் தவிர்த்தவரைக் கொண்டே இருமணங் கொண்டும்,
தம்மைப் பணிகொண்டவரைத் தாம் தூதுபோக்கல் முதலிய ஏவல் கொண்டும்
வல்லாளராய், பெருவாழ்வு தரும் திருத்தொண்டத் தொகை விரித்தமையான்
உலகர்பால் பேரருளாளராய் அரசர்கோலமும், அந்தணர்சீலமும் ஒருங்கு
திகழ விளங்கும் சுந்தரமூர்த்தி நாயனார் எமது வழிவழித் தெய்வம் ஆவர்.

     வழக்கில்லா வழக்கு ஆதலின் வல் வழக்காயிற்று.

மாணிக்கவாசக சுவாமிகள்

     பெருந்துறையிற் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணைப்
பெற்றி நோக்கிக், கரைந்துகரைந் திருகண்ணீர் மழைவாரத் துரியநிலை
கடந்து போந்து, திருந்து பெருஞ் சிவபோகக் கொழுந்தேறல்
வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந், திருந்தருளும் பெருங்கீர்த்தி வாதவூ
ரடிகளடி யிணைகள் போற்றி.                               15

     சிவபெருமான் திருப்பெருந் துறையில் வைத்து அருளிய அளவிலே
அவனுடைய பேரருட் டிறத்தை எண்ணி எண்ணி உள்ளம் உருகி உருகி
உடனாய்த் தொடுமணற் கேணியிற் சுரந்து கண்கள் நீர் பாயத் துரியாதீ
தநிலை பெற்றுச் சிவபோகமாகிய செழுந் தேனைப் பெருக உண்டு நிறைந்து
இறுமாந்து மீளாதிருந்தருளும் பெரும் புகழுடைய திருவாதவூரர் திருத்தாள்
காப்பதாக.

     இந் நான்கு திருப்பாடல்களுக்கு ஒப்பனவும் உயர்ந்தனவும் இல்லை
என்க.

அறுபத்து மூவர்

கலி விருத்தம்

தத்து மூதெயில் மூன்றும் தழலெழ
முத்து மூரல் முகிழ்த்த நிராமய
சித்து மூர்த்திதன் தாளிணை சேர்அறு
பத்து மூவர் பதமலர் போற்றுவாம்.        16