600காஞ்சிப் புராணம்


     இரவில் செயற்படும் கோட்டான் முதலிய பறவைகளும், கொடுமைமிக்க
புலி முதலிய விலங்குகளும் தேன்மணங் கமழும் செவ்வல்லி மலரும்,
நிலவைப் பருகும் சகோரப் பறவையும், முறையே இரவில் புடை
பெயரமாட்டாத காக்கைகளையும், குரங்கினங்களையும், தாமரை மலர்களையும்,
சக்கரவாகப் பறவைகளையும் ஒத்தன.

அலர்தலை உலகங் காணார் அதற்படு பொருள்கள் காணார்
நிலைபெறு தத்தம் யாக்கை நீர்மையுங் காணார் முந்நீர்க்
கலிதிரை வரைப்பி னோருங் கண்டறி யாத வானத்
தலைவருந் திமிரம் ஒன்றே தணப்பறக் காண்டல் பெற்றார்.   30

     உலகையும், அதனிடைப் பொருள்களையும், தத்தம் உடம்பின்
இயல்புகளையும் உலகோர் காணாராய் இருளொன்றையே கண்டனர். இரவு
பகலில்லாத ஒளியுடைய விண்ணுலகோரும் கண்டறியாத இருளையே
நீக்கமின்றிக் கண்டனர்.

இறந்தது படைப்பின் ஆக்கம் இகந்தன வேள்விச் செய்கை
பறந்தன தவந்தா னங்கள் பறைந்தன கடவுட் பூசை
துறந்தன கலவி இன்பந் தொலைந்தன அறிவின் தேர்ச்சி
மறந்தன மறைநூற் கேள்வி மயங்கின உலகமெல்லாம்.    31

     ஒழிந்தது சிருட்டி. அழிந்தன வேள்விகள். ஓட்டெடுத்தன தவமும்
தானமும். ஓடி ஒழிந்தன திருக்கோயில் வழிபாடுகள். கைவிடப்பட்டன
சிற்றின்ப நிகழ்ச்சிகள். தொலைந்தன ஆராய்ச்சிகள். நினைவினின்றும்
நீங்கின கேள்விச் செல்வம். மருண்டன உலகங்கள் யாவும்.

இறைவி கைநீப்ப இறைவன் கண்திறத்தல்

கடவுளர் முனிவர் மக்கள் யாவருங் கவன்றாங் காங்குப்
படலைவல் லிருளின் மூழ்கிப் பதைபதைத் தாவா வென்னக்
கடலொலிக் கிளர்ச்சி நாண முறையிடுங் காலை வெற்பின்
மடவரல் கரங்கள் நீப்ப மலர்விழி திறந்தார் ஐயர்.     32

     தேவரும், முனிவரும், மக்களும் பரவிய பேரிருளில் மூழ்கி அந்தோ
என் றரற்றி நடுங்கிக் கடலொலி வெள்கும்படி முறையிட்டரற்றும்பொழுது
உமையம்மையார் கண்களைப் புதைத்த கைகளை எடுக்கக், கண்
திறந்தருளினர் முதல்வர்.

அல்கின ஒளிகள் எங்கும் அஃகிய திருளின் வீக்கம்
மல்கின படைப்புங் காப்பும் வயங்கின அறத்தின் ஈட்டம்
பல்கின வேள்வி எங்கும் பரந்தன இறைவர் சீர்த்தி
புல்கின வேத வாய்மை பொலிந்தன உயிர்க ளெல்லாம்  33

     ஒளிகள் எவ்விடத்தும் குடிகொண்டன. இருட் பெருக்கம் சுருங்கியது.
படைத்தலும் காத்தலும் ஆகிய தொழில்கள் நன்கு