| 		| அன்றிய நெஞ்சுரை செல்லரு நீஅவ ரவர்தத்தம் பொன்றும் உணர்ச்சியின் அர்ச்சனை பூணவும் எளிவந்தாய்.  42
 |       அவ்வளவில் ஆளுடைய நாயகியார் இறைவரை வணங்கி ஒருப்பட்ட    சிந்தையொடும் உரைப்பர், மாறுபட்ட மனம் வாக்குக்களைக் கடந்த நீர்
 அவரவர் சிற்றுணர்ச்சியொடும் புரியும் பூசனையை ஏன்று கொள்ள எளியரும்
 ஆயினீர்.
 		| நானும் மகிழ்ந்துனை அர்ச்சனை செய்யும் நலம்பெற்றேன் தேனமர் கொன்றை மிலைச்சிய செஞ்சடை வள்ளால்நின்
 ஊனமில் பூசனை செய்திறம் எத்திறம் உரைஎன்ன
 ஆனுடை ஊர்தி அருட்கட லன்னவர் புகல்கிற்பார்.      43
 |       ‘அடியேனும் பூசனையை மகிழ்ந்து செய்யும் பேறு பெற்றேன்’     வள்ளலே! குற்றமற்ற பூசனையைச் செய்யும் முறையை உரைமின். என்று
 வேண்ட, விடையேறுகைக்கும் விமலர் அருள்வார்.
 		| கரிசறு நித்தநை மித்திக காமிய மெனமூன்றாம் உரிமையின் எம்அடி அர்ச்சனை ஏனைய உலகத்துப்
 புரிதரு பூசனை நித்திய பூசனை யாம்அன்றித்
 தெரிதரில் இன்னவை காமியம் நைமித் திகம்ஆகா.    44
 |       உரிமையொடும் எம்மைப் பூசனை செய்தல் நித்தம், நைமித்திகம்,    காமியம் என மூவகையாகும். மண்ணுல கொழித்த உலகங்களில் நித்திய
 பூசனை ஒன்றே செய்தல் அமையும். பிற இரண்டும் அவ்வுலகங்களில்
 செய்தல் கூடா.
 		| பொருவறு மூன்று முறும்கரு மம்புரி நிலமீதே கரும நிலந்திகழ் பாரத மாம்வரு டங்கண்டாய்
 திரைகெழு கீழ்க்கடல் மேற்கடல் சேதுவொ டிமயத்துள்
 மருவிய மேதினி பாரத மால்வரு டம்மாமால்.      45
 |       ஒப் பிகந்த முத்திறப் பூசனையும் புரிதற்குரிய கரும பூமி இந்நிலேமே.    கரும பூமியே பாரத பூமி எனப்படும், அது கிழக்கிலும் மேற்கிலும் கடலை
 எல்லை யாகவும் வடக்கிலும் தெற்கிலும் முறையே இமயமலையையும்
 சேதுவையும் எல்லையாகவும் உடையது.
 		| இத்தகு பாரத மாம்வரு டத்தின் எமக்கான உத்தம வைப்பின் விதிப்படி எம்மை இலிங்கத்தின்
 முத்துறழ் வெண்ணகை முற்றிழை மூதுல கெல்லாம்மெய்ச்
 சித்தி பெறும்படி வல்லை அருச்சனை செய்கிற்பாய்.   46
 |       இந்நிலையுடைய பாரத பூமியில் எமக்குரிய உத்தமத் தலத்திடை    விதிப்படி சிவலிங்கத்தில் முற்றுப் பெற்ற அணியினளே! ஆன்மாக்கள்
 நலம் பெற விரைந்து எம்மைப் பூசனை செய்வாயாக.
 |