604காஞ்சிப் புராணம்


காஞ்சியே தவம்செயற்கு இடமெனல்

என்றலும் ஆவயின் எண்ணில் தலங்களுள் எம்மான்நீ
நன்று மகிழ்ந்துறை மிக்குயர் நற்றலம் யாதென்னக்
குன்று குழைத்து வடிக்கணை பூட்டினர் கோல்கோடி
அன்றினர் இஞ்சி அழித்தருள் அங்கணர் தாம்சொல்வார்.   47

     ‘அங்குள்ள பல தலங்களுள் எம்மானே! நீ விரும்பி வீற்றிருக்கும்
நல்லிருக்கை யாது’ என வினவலும், மேருவை வில்லாகக் கொண்டு,
கொடுங்கோன்மை புரிந்து மாறுபட்ட முப்புரர் கோட்டையை அழித்தருளும்
பெருமான் அருள்வார்.

     ஆயிடைநாம் மகிழ்ந்துறையும் திருப்பதிகள் பலகோடி அவற்றுள்
மேலாம், ஆயிரத்தெட் டவற்றதிகம் ஒருநூற்றெட்டவற்றதிகம் அறுபத்
தெட்டாம், ஆயினவற் றுயர்காசி காஞ்சியெனும் இரண்டதிகம்
அறிவான் மிக்கோர், ஆயின் அவை இரண்டுள்ளும் சாலநமக்
கினியநகர் அணிநீர்க் காஞ்சி.                              48

     அங்குள்ள பலகோடி இருக்கைகளுள் ஆயிரத்தெட்டுத் தலங்கள்
மிக்கன. அவற்றுள் நூற்றெட்டுத் தலங்கள் சிறந்தன. எனினும்,
அறுபத்தெட்டாலயங்கள் மிக்கினியன. ஆயினும் காசி காஞ்சி என்னும்
தலங்கள் மேன்மையுடையன. அறிவினால் மிக்கோர் ஆராய்வுழி எமக்குப்
பெரிதும் மிக்கது காஞ்சியே ஆகும்.

     இவ்வண்ணம் தானங்கள் பலவகுத்த தெற்றுக்கேல் இயம்பக்
கேளாய், மைவண்ண இருள்மலத்தின் இருவினையாற் பிணிப்புண்டு
மருளின் மூழ்கி, உய்வண்ணம் அறியாத பசுக்கள்தமை அம்மலத்தின்
உறாத நாமே, மெய்வண்ணப் பெருங்கருணைத் தன்மையினால்
விடுவிக்க வேண்டு மாற்றான்.                              49

     இங்ஙனம் திருத்தலங்கள் பலவாக வகுத்தது எதற்கெனின், கூறக்
கேட்டி. ஆணவமலம் காரணமாக இருவினைகளாற் கட்டுண்டு மயக்கத்தின்
மூழ்கிப் பிழைக்கும் வழி தெரியாத ஆன்மாக்களாகிய பசுக்களை இயல்பாகப்
பாசங்களின் நீங்கிய யாமே பெருங்கருணை உண்மையினால் விடுவிக்க
வேண்டுதலின்,

     மருவாரும் பூங்குழலாய் ஐவகைய சத்திகளை வகுத்துப் பின்னர்,
அருநான்கும் உருநான்கும் அருவுருவந் தான்ஒன்றும் ஆக ஒன்பான்,
திருமேனி தோற்றுவித்துத் தோற்றமுதல் ஐந்தொழிலும் செய்வான்
உன்னி, இருவேறு மாயைகளின் உடல்கருவி இடம் அனைத்தும்
உயிர்கட் கீந்து.                                         50

     ‘ஏலவார் குழலீ! பராசத்தி, திரோதானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி,
ஞானசத்தி எனப்படும் ஐவகைச் சத்திகளைப் படைத்து, மேலும் சிவம்,
சத்தி, நாதம், விந்து என்னும் அருவடிவங்களையும்,