| சதாசிவன் என்னும் அருவுருவடிவையும், மகேசுரன், உருத்திரன், திருமால்,    பிரமன் எனப்பெறும் உருவத் திருமேனிகளையும் தோற்று வித்துப்படைத்தல்,
 காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலையும்
 நடாத்துவான் திருவுளங்கொண்டு சுத்தாசுத்த மாயைகளினின்றும் தனுகரண
 புவன போகங்களை உயிர்களுக்கு வழங்கி,’
      உள்ளமுதல் விகாரத்தின் எய்தும்இரு வினைக்குரிய பிறவி    காட்டிப், பள்ளநீர் நடுக்கீழ்மேல் ஊசலெனக் கொட்புறுத்துப் பருவம்
 நோக்கி, மெள்ளவினைப் பயன்ஊட்டி நஞ்சோடு சுவையமிழ்தும்
 விரவித் தீற்றித், தெள்ளுதவம் அறிந்தறியா துபாயத்தும்
 உண்மையினும் சேரச் செய்வேம்.                           51
      ‘அந்தக் கரணங்களின் வேறுபாடாகிய விருப்பு வெறுப்புக்களான்     வரும் புண்ணிய பாவப் பயனுக்குத் தக்க பிறவியைக் கொடுத்துத் தரை,
 நரகம், சுவர்க்கம் ஆகிய இடங்களில் அங்கு மிங்குமாகச் சுழல்வித்துப்
 பதப்பட்ட பயன்களை நுகர்விக்கும் வகையால் விடமும் அமிழ்தும் போலும்
 துன்ப வின்பக் கூறுகளைக் கலந்தூட்டிச் சிவ புண்ணியங்களை அபுத்தி
 பூர்வமாயும், புத்தி பூர்வமாயும் உபாயம் உண்மை என்னும் சிவ
 நல்வினையைச் சேர்விப்போம்.’
 தீக்கையின் வகை	      சரியையெனக் கிரியையென யோகமென ஞானமெனச் சாற்று    நான்காம், இரியமலத் துகளறுத்து நமைக்காட்டும் அருந்தவங்கள்
 இவற்றிற் சேறற், குரிமைதரும் உயர்தீக்கை சமயமுதல் மூன்றவைதாம்
 உதவும் முத்தி, அரிலகன்ற எம்முலகத் துறலாதி நான்கென்ன
 அறையும் நூல்கள்.                                      52
      ‘மலக் குற்றத்தைக் கெடுத்து நம்மைத் தரிசித்தற் கேதுவாகிய சரியை,    கிரியை, யோகம், ஞானம் எனப்பெறும் நிலைகளில் நிற்றற் குரிமை ஆக்கும்
 சமயம் முதலாம் மூன்று தீக்கைகளும் உதவும் முத்தியைக் குற்றமற்ற
 சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னக் கூறும் திருமறைகள்.’
          தேக்கூறு தேமொழியாய் மலம்சீக்கும் தீக்கைபல விதமாம்     அங்கண், நோக்கூறு மொழிஎண்ணம் நூல்யோகம் அவுத்திரியா
 நுவலும் ஏழுள், மீக்கூறும் அவுத்திரிதான் வியன்கிரியை ஞானமென
 இருபா லாய்முப், பாற்கூறு படுஞ்சமய விசேடநிருவாணம்எனும்
 பகுப்பி னாலே.                                         53
      ‘இனிமை மிகுகின்ற தேன் போலும் மொழியினளே!  மலத்தைப்    போக்குகின்ற தீக்கைகள் பலவகைப்படும். அவை; சட்சு தீட்சை, பரிச
 தீட்சை, வாசக தீட்சை, மானத தீட்சை, சாத்திர தீட்சை,
 |